பஞ்சாப் மாநிலத்தில் தற்போது சரண்ஜித்சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலத்திற்கு வரும் பிப்ரவரி 14-ந் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப்பில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரசும், ஆட்சியை பிடிக்க பா.ஜ,.க.வும், இவர்களுடன ஆம் ஆத்மியும் போட்டியில் உள்ளன.


இந்த நிலையில், 86 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் நேற்று அறிவித்தது. பஞ்சாப் காங்கிரஸ் தலைவரான நவ்ஜோத்சிங் சித்து அமிர்தரசஸ் கிழக்கில் போட்டியிடுகிறார்.





இந்த நிலையில், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,


“  பஞ்சாபின் லூதியானாவை மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி தொழில்துறைக்கான மையமாக உருவாக்கவும், முதலீட்டிற்கான ஒற்றைச் சாளர அனுமதியுடன் எலான்மஸ்க்கை நான் அழைக்கிறேன். இது பஞ்சாபிற்கு புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வரும். இது பசுமையான வேலைகளை உருவாக்குதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான நடைப்பாதையை அமைக்கும்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.






முன்னதாக, பிரணாய் பதோல் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்க்கிடம், இந்தியாவில் டெஸ்லா காரை லாஞ்ச் செய்வது குறித்து ஏதேனும் தகவல் உண்டா? என்று கேட்டு பதிவிட்டார். அவரது கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க், அரசுடன் இணைந்து பணியாற்ற பல சவால்களை இன்னும் எதிர்கொண்டுள்ளோம் என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவிற்காகவே நவ்ஜோத்சிங் சித்து இந்த பதிவை பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண