தமிழ்நாடு:
- தமிழ்நாடு முழுவதும் இன்று மாட்டு பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- தமிழ்நாட்டு கிராம பகுதிகளில் மாட்டு பொங்கல் காரணமாக மாடுகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.
- மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. பாலமேட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
- பக்திப் பரவசத்துடன் பல ஆயிர கணக்கான ஐயப்ப பக்தர்கள் நேற்று சபரி மலையில் மகர ஜோதி தரிசனம் செய்தனர்.
- மதுரை அவனியாபுரத்தில் நேற்று வெகுவிமர்சையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. 24 காளைகளை பிடித்த வீரருக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.
- சென்னையில் இரவு நேர ஊரடங்கில் வெளியே வந்த வாகனங்களை காவல்துறையினர் சோதனை செய்தனர்.
இந்தியா:
- ஹெலிகாப்டர் விமான விபத்திற்கு மோசமான வானிலை மாற்றமே காரணம் என்று விசாரணை அறிக்கை தாக்கல்.
- வரும் 31ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் தொடங்குகிறது.
- குஜராத்தில் வீட்டிலிருந்து மக்கள் பட்டத்தை பறக்கவிட்டு மகிழ்ந்தனர்.
- லடாக் பகுதியில் கடும் பனியிலும் இந்திய ராணுவ வீரர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
- குஜராத்தில் அதிகாரிகள் சுதாரித்து கொண்டதால் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.
- உத்தரப்பிரதேசத்தில் பாஜகவில் இருந்து விலகிய எம்.எல்.ஏக்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.
உலகம்:
- ரஷ்யா-உக்ரைன் அரசுகளுக்கு இடையே எல்லை பகுதிகளில் போர் மூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- இந்திய ஏவுகணை தயாரிக்கும் நிறுவனத்திடமிருந்து ஏவுகணைகளை வாங்க பிலிபைன்ஸ் நாடு திட்டம்.
- இந்தியா-ஜப்பான் கடற்படையினர் இடையே போர் பயிற்சி நடைபெற்றது.
விளையாட்டு:
- தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
- தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது.
- இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
- இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்றுள்ள மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
- காமென்வெல்த் தொடர் ஜோதி இந்தியாவின் ஒடிசாவை வந்தடைந்தது.
- டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு மீண்டும் ரத்து செய்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்