தமிழ்நாடு: 



  • பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

  • அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று முதல் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. 

  • கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு. 

  • 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு நேரடியாக பொதுத்தேர்வு நடைபெறும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

  • தமிழ்நாட்டில் ஒரே நாளில் 3,32.493 சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

  • ஒமிக்ரான் கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: முதலமைச்சர்

  • கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாவிட்டால் அபராதம் 

  • தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளிஒல் 1728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. 

  • திருவண்ணாமலையில் 22,310 சிறுவர்களுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

  • தஞ்சாவூரில் வங்கி லாக்கரில் எடுக்கப்பட்ட மரகதலிங்கம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

  • தென்தமிழக கடலோர பகுதிகளில் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்


இந்தியா:



  • மேகதாது வழக்கு வரும் 25ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை

  • மத்திய அரசு அலுவலகங்களில் 50% பணியாளர்கள் மட்டும் பணி செய்ய உத்தரவு

  • மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம். 

  • காலாவதியான தடுப்பூசி என்ற புகாருக்கு தடுப்பூசி நிறுவனம் பதில்

  • இந்தியா முழுவதும் ஒரே நாளில் 41.30 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

  • அனைத்து மாநில டிஜிபிக்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.

  • மணிப்பூர்-திரிபுரா மாநிலங்களுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்.

  • மும்பையில் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 31 தேதி வரை பள்ளிகள் மூட அறிவிப்பு.


உலகம்:



  • பூஸ்டர் தடுப்பூசியால் 88% பாதுகாப்பு இங்கிலாந்தில் நடந்த ஆய்வில் கண்டுபிடிப்பு

  • அமெரிக்காவில் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி.

  • இந்திய சீன எல்லை பிரச்னை: ஏரியின் குறுக்கே பாலம் கட்டும் சீன ராணுவம்.

  • பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனரோ மருத்துவமனையில் அனுமதி.

  • துப்பாக்கிச் சூட்டில் இருந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி தப்பியுள்ளார்.


விளையாட்டு:



  • தென்.ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட்.

  • முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. 

  • காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி விலகல்.

  • கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவருடைய ரசிகர்கள் சோகம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண