தமிழ் திரையுலகம் வில்லன் நடிகர்களுக்கு எந்தளவு ரசிகர்கள் உள்ளனரோ, அதே அளவில் பாலிவுட் திரையுலகிலும் வில்லன் நடிகர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகர் பிரேம் சோப்ரா.


86 வயதான பிரேம் சோப்ரா மும்பையில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக அவர் சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு மட்டுமின்றி அவரது மனைவி உமா சோப்ராவிற்கும் கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டது.




இதையடுத்து, பிரபல பாலிவுட் நடிகர் பிரேம் சோப்ராவும், அவரது மனைவி உமா சோப்ராவும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரேம் சோப்ராவிற்கும், அவரது மனைவிற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், அவர்கள் இருவரும் இன்னும் ஓரிரு தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் பர்கர் தெரிவித்துள்ளார். பிரேம்சோப்ராவின் மனைவி உமா சோப்ரா பிரபல நடிகர் ராஜ்கபூரின் மனைவி கிருஷ்ணா கபூரின் சகோதரி ஆவார்.


பாலிவுட் திரையுலகில் 50 ஆண்டுகாலமாக வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ள பிரேம் சோப்ரா 1935ம் ஆண்டு பிறந்தவர். 1960ம் ஆண்டு முதல் நடித்து வரும் பிரேம் சோப்ரா இதுவரை இந்தியிலும், பஞ்சாபியிலும் 380க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாராக திகழ்ந்த ராஜேஷ் கண்ணாவிற்கு வில்லனாக 19 படங்களில் நடித்துள்ளார்.




பாலிவுட் திரையுலகின் இதுவரை ஜான் ஆப்ரஹாம், அவரது மனைவி பிரியா ருஞ்சால், ஏக்தா கபூர், மிருணாள் தாக்கூர், நோரா படாஹி, ராகுல் ரவாய்ல், ரே கபூர், கரண் பூலாணி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பாலிவுட் திரையுலகின் பிரபல வில்லனான பிரேம் சோப்ரா இந்தி மொழி மட்டுமின்றி பஞ்சாபி மொழியிலும் ஏராளமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 50 ஆண்டு காலமாக திரைத்துறைக்கு என்று தனது நடிப்பால் பெரும் சேவை ஆற்றியுள்ளார். 1996ம் ஆண்டுக்கு பிறகு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரேம் சோப்ரா, 2007ம் ஆண்டுக்கு பிறகு நடிப்பதை குறைத்துவிட்டார்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண