இந்தியா:


உபியில் அதிவிரைவு சாலையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி - அவசர காலத்தில் போர்விமானம் தரையிறங்க 2.3 கிமீ ஓடுபாதையும் அமைக்கப்பட்டது.


தமிழ்நாடு:


சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்பு - நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்


மழையால் முழுமையாக சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு - முதலமைச்சர் முக ஸ்டாலின்


குழந்தைகளின் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றியதாக புகார் - தமிழகத்தில் 5 இடங்களில் சிபிஐ சோதனை


அனைத்து வகை கல்லூரிகளுக்கும் செமஸ்டர் தேர்வுகள் இனி ஆன்லைன் இல்லை - நேரடித்தேர்வு மட்டுமே நடைபெறும் என உயர் கல்வித்துறை திட்டவட்டம்


நவம்பர் 19ம் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் - வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தகவல்


வாரத்தில் இரண்டு நாட்கள் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் - அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி


சென்னை திநகரில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு


ஜெய்பீம் விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு வெற்றிமாறன், கருணாஸ், பாரதிராஜா, அமீர் உள்ளிட்ட சினிமாத்துறையினர் ஆதரவு


விளையாட்டு:


டி20 முதலாவது போட்டியில் இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல்


உலகம்:


இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட இந்தியர்களுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது