மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டில்லி எல்லையில், விவசாயிகள் நான்கு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு, 'சம்யுக்தா கிசான் மோர்ச்சா' அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இது குறித்து, விவசாய சங்க மூத்த தலைவர் பல்பீர் சிங் ரஜேவால் கூறுகையில், ‛நாடு தழுவிய முழு அடைப்பு இன்று நடைபெற உள்ளது.


எனினும், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறாது என்றும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட அவசர சேவைகள் அனுமதிக்கப்படும்,’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க போவதில்லை என, இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. விவசாயிகள் போராட்டம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்,