தமிழ்நாடு :
- தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு
- சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவே அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை விளக்கம்
- ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை
- தமிழ்நாட்டில் வரும் 3-ந் தேதி வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு – சென்னையில் இடி, மின்னலுடன் இதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு
- தென்சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர்
- மழைநீர் வடிகால் பணிகளை பருவமழைக்கு முன்பு விரைந்து முடிக்க வேண்டும் – அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதல்வர்
- 2024 தேர்தலில் தி.மு.க.விற்கு எதிரான தாக்கம் இருக்கும் – எடப்பாடி பழனிசாமி
- சென்னை. ஓட்டேரி காவல்நிலையத்தில் போலீசார் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பா..? மாஜிஸ்திரேட் விசாரணை
- தேனியில் கழிவறை தொட்டியில் தவறி விழுந்து சிறுமிகள் உயிரிழப்பு – சோகத்தில் மூழ்கிய கிராமம்
- நியாய விலைக்கடையில் காலியாக உள்ள பணியிடங்கள் நேர்மையான முறையில் நிரப்பப்படும் – அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி
- சென்னை ரயில்வே கோட்டத்தில் நடைமேடை கட்டணம் உயர்வு – நாளை முதல் அமலுக்கு வருகிறது
- மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது
இந்தியா :
- நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம் – குஜராத் முதல் மும்பை வரையிலான ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
- மின் ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம் – புதுச்சேரியில் பல இடங்களில் மின்தடை
- புதுச்சேரியில் ஏற்பட்ட கடுமையான மின்தடையால் பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல்
- காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகினார் அசோக் கெலாட்
- காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசி தரூர், திக் விஜய் சிங் இன்று மனுத்தாக்கல்
- சட்டப்பூர்வ மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ள பெண்களுக்கு உரிமை உண்டு
- 68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் தொடக்கம்
உலகம் :
- கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு தொடக்கம் – திருவள்ளுவர் சிலை திறப்பு
- உக்ரைனுக்கு மேலும் ரூபாய் 1 லட்சம் கோடி நிதியுதவி வழங்கிய அமெரிக்கா
விளையாட்டு :
- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேசிய விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
- காயம் காரணமாக டி20 உலககோப்பைத் தொடரில் இருந்து விலகினார் பும்ரா – இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு