தமிழ்நாடு :



  • பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஓய்வு வயது 60 - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

  • பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் பிரிவினரை தனிப்பட்ட வர்க்கமாக வகைப்படுத்த முடியாது : உச்சநீதிமன்றத்தில் திமுக கூடுதல் மனு

  • கள்ளக்குறிச்சி வழக்கில் மாணவியின் பெற்றோர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை - நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பு குற்றச்சாட்டு

  • சென்னையில் அதிகாலை முதல் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

  • அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமசந்திரனை நியமித்தார் ஓபிஎஸ்; கட்சியில் இருந்தே நீக்கிய எடப்பாடி பழனிசாமி

  • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தமிழக அரசு சார்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

  • தமிழகத்தின் சாபக்கேடு திமுக ஆட்சி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

  • தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல்

  • ஆன்லைன் விளையாட்டை தடை செய்வது இயலாத காரியமாக உள்ளது - மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து


இந்தியா:



  • பி.எஃப்.ஐ அமைப்பிற்கு தடை - மத்திய அரசு 

  • ராஜஸ்தானில் ஏற்பட்ட குழப்பத்திற்கு கெலாட் மீது தவறு இல்லை: சோனியாவிடம் மேலிட பார்வையாளர்கள் அறிக்கை

  • கர்ப்பிணிப் பெண்களுக்கு சிசேரியன் அல்லாத  சுகப்பிரசவத்தை ஊக்குவிக்கும் முயற்சியை தெலங்கானா அரசு தொடங்கியுள்ளது. 

  • 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

  • இந்திய உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக அரசியல் சாசன அமர்வில் வழக்கு விசாரணை நேரடியாக நேற்று ஒளிபரப்பப்பட்டது.

  • தாஜ்மஹாலை சுற்றி 500 மீட்டர் சுற்றளவுக்கு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உலகம்: 



  • வங்கதேச படகு விபத்து: பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு

  • ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமருடன் நேற்று சந்தித்தார்.

  • தென்கொரியாவில் தற்கொலை செய்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை விகிதம் அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • இரண்டாம் உலக போருக்கு பிறகு முதல்முறையாக தீவிர வலதுசாரி அரசு இத்தாலியில் அமைய இருக்கிறது.


விளையாட்டு: 



  • இந்திய ராணுவத்தில் இணையும் முதல் குத்துச்சண்டை வீராங்கனை ஜெயஷ்மின் லம்போரியா

  • இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 இன்று இரவு 7 மணிக்கு திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது.

  • அடுத்த மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக வார்ம் அப் மேட்சுக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

  • இந்தியா- ஆஸ்திரேலியா போட்டியின்போது ஜெய்ஸ்ரீராம் கோஷம் ஒலிக்கப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.