தமிழ்நாடு:
- தமிழகத்தின் வனப்பரப்பை அதிகரிக்க பசுமை தமிழகம் இயக்கம்: முதல் கட்டமாக 2.80 கோடி மரம் வளர்க்க திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ; சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை
- தமிழ் என்பது வெறும் மொழி அல்ல, நமது உயிர் - சென்னையில் தமிழ் பரப்புரை கழகம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உரை
- சென்னையில் இருந்து புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுலா பயணம்: அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்
- 12 மாத மகப்பேறு விடுப்பு உள்பட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கி பெண்களை ஊக்குவிக்கிறது - ஐகோர்ட் கிளை பாராட்டு
- படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கினால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை
- தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 15,900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்தியா:
- குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை ஆன்லைனில் பரப்பும் விவகாரம் ; நாடு முழுவதும் 59 இடங்களில் சி.பி.ஐ. சோதனை
- பாப்புலர் பிரண்ட் போராட்டத்தில் வன்முறை, போராட்டக்காரர்களிடம் இருந்து நஷ்ட ஈடு வசூல் செய்யுங்கள் - கேரளா நீதிமன்றம் உத்தரவு
- நாடு முழுவதும் 5ஜி சேவையை பிரதமர் மோடி வரும் அக்டோபர் 1-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.
- காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட சசிதரூரும் களமிறங்கியுள்ளதால், அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உலகம்:
- பணத்தை புரட்ட வேறு வழியில்லை; மீண்டும் கஞ்சா ஏற்றுமதி செய்ய இலங்கை அரசு முடிவு - விரைவில் சட்டத்திருத்தம்
- சமர்கண்ட் மாநாட்டில் இருந்து திரும்பியபோது சீனாவில் அதிபர் ஜின்பிங் கைது..? ராணுவ தளபதி லீ சாவ்மிங் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல்
- இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல்முறையாக உக்ரைனில் ரஷிய மக்களை குடியேற்ற புதின் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டிருந்தார்.
- கனடாவில் பியோனா காரணமாக அதிக காற்று, புயல் மற்றும் அதிக மழைப்பொழிவு பெய்யும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
- கொரோனா பெருந்தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பூட்டானில் சர்வதேச சுற்றுலாவாசிகளுக்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு:
- இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி: இந்திய மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய மகளிர் வேகப்பந்து வீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி ஓய்வு பெற்றார்.