தமிழ்நாடு:



  • சென்னை தலைமை செயலகத்தில் வரும் 26ம் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் : சட்டப்பேரவை கூட்டுவது குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்

  • தமிழ் இணைய கல்விக்கழகத்தின் சார்பில் தமிழ் பரப்புரைக்கழகம் தொடக்க விழா : முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

  • திருவாரூரில் அரசு பேருந்துகள் கண்ணாடி உடைப்பு - மர்மநபர்களை தேடும் போலீசார்

  • தமிழகத்தில் 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

  • எய்ம்ஸ் அமைப்பதற்கான உயர்த்தப்பட்ட நிதிக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்படாமல் உள்ளதால் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவங்கபடாமல் உள்ளது - மதுரை எம்பி சு.வெங்கடேசன்

  • காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடக்குபட்டு என்ற கிராமத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராட்சியில், பழங்கற்கால் மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு - வானதி சீனிவாசன் கண்டனம்

  • எங்கிருந்தும் எந்நேரத்திலும் திட்டத்தின் கீழ் இணையத்தில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி : முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


இந்தியா:



  • திமுக என்றால் குடும்பம் அரசியல், பணம் வசூல், கட்டபஞ்சாயத்து தான். மாநில வாதம் பேசும் திமுக தமிழ்க்காக என்ன செய்தது - பி.ஜே.பி தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா

  • சோனியா, ராகுல் ஆதரவுடன் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கெலாட் போட்டி : சசி தரூர் உள்பட மேலும் சிலர் போட்டியிடுவதாக தகவல் - இன்று வேட்புமனு தாக்கல்

  • ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்காக நிதி வசூல் : தமிழகம் முழுவதும் 11 பேர் கைது என தேசிய புலனாய்வு அதிகாரிகள் தகவல்

  • பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இனி முன்ஜாமீன் கிடையாது - உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் சட்டமசோதா நிறைவேற்றம்

  • அர்பன் நக்சல்களின் சதியை முறியடிக்க வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு

  • இந்தியாவில் நேற்று அரிதான நிகழ்வாக இரவும், பகலும் சமமாக 12 மணி நேரமாக நிகழ்ந்தது


உலகம்:



  • ஈரானில் போலீஸ் காவலில் இளம்பெண் மரணம்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்ட மோதலில் 31 பேர் உயிரிழப்பு

  • ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசீர் அக்பர் கான் பகுதியில் வெடிகுண்டு சத்தம் - உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிஸ்முலா ஹபீப் உறுதி

  • செயற்கையான சீன அதிகாரிகளுக்கு மத்தியில் இறப்பதை விட இந்தியாவின் சுதந்திர ஜனநாயகத்தில் இறக்க விரும்புகிறேன் - திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா 

  • ரஷ்யர்களை உக்ரைனில் குடியேற்ற புதின் உத்தரவு; விமான டிக்கெட் விற்பனை நிறுத்தம்


விளையாட்டு:



  • ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

  • இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 போட்டிகள் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.