தமிழ்நாடு :



  • தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

  • கள்ளக்குறிச்சியில் கலவரத்தில் தாக்கப்பட்ட பள்ளியை மறுசீரமைக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி

  • சேலத்தில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்து – 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • பெரியாரின் 144வது பிறந்தநாள் கோலாகல கொண்டாட்டம் - முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

  • வேளச்சேரி இரண்டடுக்கு பாலத்தின் புதிய பகுதியை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 


இந்தியா :



  • தேசிய சரக்குப் போக்குவரத்து கொள்கையை வெளியிட்டார் பிரதமர் மோடி

  • பழைய இந்தியாவில் புறாக்கள் பறந்தன ; புதிய இந்தியாவில் சிறுத்தைகள் சீறிப்பாய்கின்றன – பிரதமர் மோடி பேச்சு

  • பா.ஜ.க. பிரமுகரான நடிகை சோனாலி போகத்தின் மரணம் தொடர்பான வழக்கை தீவிரப்படுத்திய சி.பி.ஐ.

  • கவுகாத்தி ஐ.ஐ.டி.யில் படித்து வந்த கேரள மாணவர் ஐ.ஐ.டி. விடுதியில் சடலமாக மீட்பு

  • வரி ஏய்ப்பு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை தீவிரப்படுத்தியதால் முன்னணி அலைபேசி தயாரிப்பு நிறுவனங்கள் வேறு நாடுகளில் தொழிற்சாலைகள் தொடங்க திட்டம்

  • காஷ்மீரில் புதுப்பிக்கப்படும் தியேட்டர்கள் – 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொலிவு

  • ஜார்க்கண்டில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 6 பேர் பரிதாப உயிரிழப்பு

  • பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் ரத்ததானம்

  • கவுராவில் இருந்து புவனேஷ்வர் வந்த சதாப்தி ரயில் மாடு மோதி தடம்புரண்டது


உலகம் :



  • மகாராணி எலிசபெத் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு லண்டன் பயணம்

  • நாளை மகாராணி எலிசபெத் இறுதி ஊர்வலம் – லண்டனில் குவியும் உலகத் தலைவர்கள்

  • முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை அடுத்தடுத்து சந்திக்கும் இலங்கை அமைச்சர்கள்

  • நேபாள நிலச்சரிவு உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு

  • கிர்கிஸ்தான் – தஜிகிஸ்தான் நாடுகள் இடையே மோதல் – 27 பேர் உயிரிழப்பு

  • இந்தோனேஷியா தங்கச்சுரங்கத்தில் சிக்கிய 20 பேரை கண்டுபிடிக்கும் பணி தீவிரம்


விளையாட்டு :



  • சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் – இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டியில் மோதும் கனடா – பிரேசில்

  • இந்திய மகளிர் - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்