தமிழ்நாடு :



  • தமிழக அரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் ஆன்லைன் சூதாட்ட தடை அமலுக்கு வந்தது : தடையை மீறினால் 2 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம்

  • வடகிழக்கு பருவமழை தொடங்கியது : தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

  • உலக சிக்கன நாள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து 

  • கோவை கார் வெடிவிபத்து குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவதூறு பரப்புகிறார் - தமிழக காவல்துறை குற்றச்சாட்டு 

  • தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் வேலையுடன் ஓராண்டு பயிற்சி: பள்ளி கல்வி இயக்குநகரம் ஏற்பாடு

  • சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா : திருந்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் 

  • கிராம உதவியாளர் பணியிடத்தில் 4 சதவீதம் மாற்றுதிறனாளிக்கு வழங்க வேண்டும் : தமிழக அரசு உத்தரவு

  • இறுதி மற்றும் 4ம் கட்ட கலந்தாய்வு தொடங்கிய நிலையில் 25 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை : கல்வியாளர்கள் அதிர்ச்சி


இந்தியா:



  • குஜராத் - அதுல் ரயில் நிலையம் பகுதியில் மாடு மீது மோதியதில் வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது. 

  • தெலுங்கானாவில் நடைபயணத்தின் போது தொண்டர் ஒருவரின் ஆட்டுக்குட்டியை ராகுல் காந்தி தனது தோளில் சுமந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டு 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

  • எட்டு ஆண்டு கால மோடி ஆட்சியின் விளைவு வேலையின்மையே - வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

  • டெல்லியில் நேற்று மதியம் ஒரு மணியளவில் காற்றின் தரக் குறியீடு 400 முதல் 500 என்ற வரம்புக்குள் பதிவாகி மிக மோசமான நிலையை எட்டியது.

  • "அமித்ஷாவை கைது செய்யுங்கள்" டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பரபரப்பு குற்றச்சாட்டு..!


உலகம்:



  • இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லை தகராறில் பதற்றம் அதிகரித்து வருவதால், பதற்றத்தை அமைதியான முறையில் தீர்க்குமாறு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வலியுறுத்தப்படுவதாக சீனா தெரிவித்துள்ளது.

  • வாஷிங்டன்: நாசாவின் சன் டுவிட்டர் கணக்கில் பகிரபட்டு உள்ள ஒரு படத்தில் சூரியன் சிரிப்பது போன்ற படம் இடம் பெற்று உள்ளது.

  • முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று ட்விட்டரை கோடீஸ்வரர் எலன் மஸ்க்கிற்கு விற்பனை செய்ததை பாராட்டினார். 

  • அமெரிக்காவில் 84 ஆண்டுகளுக்கு பிறகு தாத்தா வாங்கிய புத்தகத்தை நூலகத்தில், அவருது பேரன் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • பிலிப்பைன்ஸில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் அதற்கு 72 பேர் பலியாகியுள்ளனர்.


விளையாட்டு: 



  • கோலி யாருக்கும் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.

  • தமிழகத்தில் அமையவுள்ள மெகா விளையாட்டு நகரம் அமைக்க திருச்சி மாவட்டம், செங்கிப்பட்டியில் இடம் தேர்வு செய்யபட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

  • இலங்கைக்கு எதிரான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

  • டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று தென்னாப்பிரிக்கா அணியை இந்திய அணி சந்திக்கிறது. பெர்த்தில் நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.