தமிழ்நாடு :



  • புதுமைப்‌ பெண்‌ திட்டத்தில்‌ உதவித்தொகை பெற முதலாம் ஆண்டு மாணவிகளும், ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறிய மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

  • கோவையில் 31ம் தேதி பாஜக பந்த் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் : காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

  • தீவிரவாத செயல்களுக்கு தமிழகத்தில் எந்த வடிவிலும் இடம் கிடையாது : ஆளுநர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி

  • கிராம சபை கூட்டம் போல தமிழகத்தில் முதன்முறையாக நவ.1ம் தேதி பேரூராட்சி, நகராட்சி, மாநகர சபை கூட்டம் : முதலமைச்சர் முக ஸ்டாலின் மக்களின் குறைகளை கேட்கிறார்.

  • வருகிற 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி : தமிழ்நாடு அரசு திட்டம்

  • அடுத்து வரும் 5 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

  • சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 1 மணி நேரம் வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

  • அரசுப் பள்ளிகளில் மழைக்கால பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.


இந்தியா: 



  • ஒரே நாடு, ஒரே காவல்துறை சீருடை - பிரதமர் மோடி விருப்பம்

  • கடனை அடைக்காதவர்களிள் மகள்கள் ஏலத்தில் விற்பனை : ராஜஸ்தானில் அதிர்ச்சி

  • இந்திய டிவி சேனல்கள் வெளிநாட்டி செயற்கைக்கோளை பயன்படுத்துவதை தடுக்க அதிரடி : கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு முடிவு

  • டெல்லியில் இருந்து பெங்களூர் புறப்பட்ட விமானத்தில் திடீரென தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • இந்தியாவின் முதல் மனித விண்வெளித் திட்டமான ககன்யான் திட்டத்தின் சோதனை விமானங்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2023-ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ளன

  • ஆன்லைனில் வழங்கப்படுவதாகக் கூறப்படும் பிஎச்.டி பட்டம் செல்லாது என்றும் போலி விளம்பரங்களை நம்பி மாணவர்களும் பொது மக்களும் ஏமாற வேண்டாம் எனவும் யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

  • வருகிற நவம்பர் 11ம் தேதி தென்னிந்தியா வரும் பிரதமர் மோடி, சென்னை- மைசூர் இடையிலான வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். 


உலகம்:



  • இந்தியா ரஷ்யா நட்பு சிறப்பானது - ரஷ்யா அதிபர் புடின் பெருமிதம்

  • ரூ.3.62 லட்சம் கோடியில் ஒப்பந்தம் முடிந்தது; எலான் மஸ்க் வசமானது ட்விட்டர் - இந்திய வம்சாவளி சீஇஓ உள்ளிட்டோர் அதிரடி நீக்கம்

  • அமெரிக்காவில் 12 வயது சிறுமியை பள்ளி பேருந்தில் ஓட்டுநர் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.


விளையாட்டு: 



  • மழையால் தொடர்ந்து ரத்தாகும் உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றுகள்: அரையிறுதி வாய்ப்பை இழக்கும் அணிகள்

  • இத்தாலி மிலன் நகரில் உள்ள ஷாப்பிங் மாலில் அர்செனல் அணி வீரர் பாப்லோ மாரியை மர்மநபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.