இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்கும், நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் இருந்து இன்று இரவு பெங்களூர் நோக்கி இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது.

Continues below advertisement

Continues below advertisement

பெங்களூர் நோக்கி ஏராளமான பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ 6இ -2131 என்ற அந்த விமானம் புறப்படுவதற்காக ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது திடீரென விமானத்தின் இறக்கையில் உள்ள ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. அதிர்ஷ்டவசமாக இதைப் பயணிகளும், விமானிகளும் பார்த்துவிட்டனர்.

உடனடியாக, விமானிகள் சாமர்த்தியமாக செயல்பட்டு இந்த விமானத்தை ஓடுதளத்திலே நிறுத்தினர். உடனடியாக, விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தது. மேலும், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.

ஓடுதளத்திலே விமானம் சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர்தப்பினர். முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும், பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.