தமிழ்நாடு :



  • தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் பணி இடங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு திரும்புவோர்களால் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் அலைமோதும் கூட்டம்

  • வெளியூர் செல்ல முன்பதிவு செய்யாதவர்கள் பேருந்து நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்த அவலம்

  • கோவையில் கார் வெடித்து சிதறிய சம்பவம் : 5 பேர் மீது பாய்ந்தது உபா சட்டம்

  • கோவை கார் வெடித்து சிதறிய சம்பவம் : கைதானவர்களில் ஒருவர் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் மகன் – விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

  • சென்னையில் விதிமீறி பட்டாசு வெடித்த 271 பேர் மீது வழக்குப்பதிவு

  • தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான புதிய அபராதம் இன்று முதல் அமல்

  • கோவை சம்பவம் : என்.ஐ.ஏ. விசாரணை கோரி அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்

  • சென்னையில் 3 நாட்களில் மட்டும் 211 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் சேகரிப்பு

  • கோவையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுடன் இன்று அடுத்தகட்ட பேச்சுவார்த்தை


இந்தியா :



  • இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தெரிந்த பகுதி நேர சூரிய கிரகணம்

  • கோவில்கள் நடை சாத்தப்பட்டு கிரகணம் முடிந்ததும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன

  • காங்கிரஸ் கட்சியின் தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் மல்லிகார்ஜூனா கார்கே

  • உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் உத்தரவு


உலகம் :



  • பிரிட்டனின் புதிய பிரதமராக ரிஷி சுனக் அதிகாரப்பூர்வமாக பதவியேற்பு

  • டவ் ஷாம்புகளில் புற்றுநோய் பரவும் அபாயம் அதிகளவில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் – திரும்ப பெற யுனிலிவர் நிறுவனம் முடிவு

  • வங்காளதேசத்தில் சிட்ரங் புயலால் பெரும் பாதிப்பு – 35 பேர் உயிரிழப்பு

  • உலகின் அழுக்கான மனிதர் 94 வயதில் காலமானார் : 50 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்த சூழலில் குளித்த 1 மாதத்தில் உயிரிழப்பு


விளையாட்டு :



  • டி20 உலககோப்பையில் இலங்கையை எளிதாக வென்றது ஆஸ்திரேலியா

  • ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 15 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தல்

  • உலககோப்பையில் இன்று நடக்கும் போட்டியில் இங்கிலாந்து – அயர்லாந்து, நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் மோதல்