தமிழ்நாடு : 



  • இந்தி மொழியை திணிக்கும் முயற்சி நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைவிக்கும் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம்

  • பரபரப்பான அரசியல் சூழ்நிலை ; பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கூடுகிறது சட்டப்பேரவை

  • நீட் தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு பெற முடியும் - முதலமைச்சர் முக ஸ்டாலின் நம்பிக்கை

  • பருவமழை 2 நாட்களில் விடைபெறும்; வருகின்ற 20ம் தேதி வரை கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் 

  • சென்னையில் நேற்று எடப்பாடி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் : சட்டப்பேரவையை புறக்கணிக்க போவதாக தகவல்

  • கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொன்ற விவகாரம் : சிசிடிவி பதிவுகளுடன் விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி

  • இந்திக்கு எதிராக திமுக நடத்திய ஆர்ப்பாட்டம் என்பது சாலையோர வேடிக்கை- H. ராஜா பேட்டி

  • வாடகைத் தாய் விவகாரம்: "வீதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

  • சூரிய கிரகணத்தால் வரும் 25-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைப்பு


இந்தியா: 



  • புதிய காங்கிரஸ் தலைவர் யார்..? நாடுமுழுவதும் இன்று வாக்குப்பதிவு - மல்லிகார்ஜீன கார்கே - சசிதரூர் போட்டி

  • எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கட்டணம் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை உயர்வு : கட்டண நிர்ணய குழு அறிவிப்பு

  • இந்திய ரூபாய் மதிப்பு சரியவில்லை ; அமெரிக்க டாலர் மதிப்புதான் உயர்ந்துள்ளது - நிர்மலா சீதாராமன்

  • நாட்டிலேயே முதல் முறையாக இந்தியில் மருத்துவ படிப்பு புத்தகங்களை வெளியிட்ட அமித் ஷா

  • அறுவை சிகிச்சை செய்து கொண்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

  • இந்தியில் மருத்துவக் கல்வி நடத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களையும் சந்தித்து வலியுறுத்துவேன் - மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்


உலகம்: 



  • போருக்கு எப்போதும் தயார்; தைவானை விடமாட்டோம் -அதிபர் ஜின்பிங் பரபரப்பு தகவல்

  • மெக்ஸிகோ மதுபான விடுதியில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயம்.

  • கொலம்பியா மலை சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் பலி, 5 பேர் படுகாயம். 


விளையாட்டு: 



  • இலங்கை அணிக்கு எதிரான டி20 உலக கோப்பையின் முதல் போட்டியில் நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

  •  இந்தியா கோப்பையை வெல்லும் வரை உலகக் கோப்பை அணியின் ஒரு பகுதியாக இருப்பது எப்படி என்று எனக்கு புரியவில்லை - ரோகித் சர்மா பேட்டி

  • உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து அணியும், மற்றொரு போட்டியில் ஜிம்பாவே- அயர்லாந்து அணிகள் மோத இருக்கின்றன.