உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவது பல உலக நாடுகள் அச்சுறுத்தி வருகிறது. இரண்டு நாட்டு பக்கங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. போரை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும் உக்ரைன் கோரிக்கை விடுத்தது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரால் கச்சா எண்ணெய்யின் விலை, தங்கம் விலை அதிகரித்துள்ளது.
தற்போது பதற்றமாக இருந்து வரும் உக்ரைனின் தமிழ்நாடு, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய மாணவ, மாணவிகள் அங்கு தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில், ரஷ்யாவில் உள்ள இந்திய மருத்துவ மாணவியிடம் ஏபிபி நாடு நேரடியாக அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து கேட்டறிந்தது. அப்போது பல்வேறு தகவல்களை அவர் நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார்.
உக்ரைனின் கார்கிவில் இருந்து மருத்துவ மாணவி பார்கவி பாதுகாப்பு குறித்து கூறுகையில், காலையில் இருந்த அதிர்ச்சியை விட தற்போது பரவலான சூழ்நிலையில் உள்ளது. காலை 5 மணியளவில் வெடிகுண்டு சத்தம் கேட்டது. அத்துடன் கட்டிடங்கள் அதிரும் சத்தமும் கேட்கப்பட்டது. அப்போது, எல்லோரும் அதிர்ச்சி அடைந்து உண்மையிலேயே போர் தொடங்கிவிட்டது என்று அறிந்தோம். கார்கிவ் நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்போல அருகில் இருக்கும் இரண்டு நகரங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், மக்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை. தாக்குதல் 'plain area' இல் நடத்தப்பட்டது. மேலும், மக்கள் மீது ரஷ்யா போர் தொடுக்காத என்று நாங்கள் நினைக்கின்றோம்” என்று கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், தனது மற்ற நாட்டு நண்பர்கள் உள்ளிட்ட பலர் போரால் அச்சத்துடன் இருப்பதாகவும், இன்று காலை முதல் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டதால், இந்தியாவுக்கு செல்ல முயன்ற அனைவரும் உக்ரைன் தலைநகரில் இருந்து மீண்டும் தங்களின் இடத்துக்கு திரும்பியதாகவும் கூறினார். மேலும், இந்தியாவில் இருந்து விமானங்கள் அனுப்பினால் அல்லது உக்ரைன் அரசு விமான இயக்கத்தை தொடங்கினால் மட்டுமே இந்தியா திரும்ப முடியும் என்றும் தெரிவித்தார்.
தாக்குதல் தொடர்பான சத்தம் கேட்கும் போது, அதான் அறிகுறி என்று நினைத்து தாங்கள் தப்பித்து செல்ல முயற்சிப்போம் என்று கூறினார். மேலும், மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும், இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் கண்டிப்பாக இருக்கிறது என்றும் மாணவி பார்கவி கூறினார். உக்ரைனின் அனைத்து வீட்டுக்குள் கீழ் பங்கர் ஒன்று இருக்கும் அதனுள் தாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்றும் கூறினார்.
கீவ் என்ற நகரத்தில் அனைவரின் வீட்டில் அரசு ஒரு ஆயுதம் கொடுத்திருப்பதாகவும், ஆனால், தங்களுக்கு அதுபோல் எதுவும் கொடுக்கவில்லை என்றும் கூறினார். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பாதுகாப்பாக இருக்க தங்களுக்கு என்று ஒரு மேப் உள்ளது. அதன்படி, அந்த மேப்பை பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும் உக்ரைன் அரசு அறிவித்துள்ளதாகவும் கூறினார். மேலும், தனது பெற்றோர் மதுரையில் இருப்பதாகவும், தான் மட்டும் உக்ரைனில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து எத்தனை இந்திய மாணவர்கள் எத்தனை பேர் அங்கு இருக்கிறார்கள் என்பது உள்ளிட்ட பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
முழு பேட்டியை காண
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்