தமிழ்நாடு :

  • தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பி.எடி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது
  • குடிமைப்பணி விதி திருத்தத்தை கைவிட வேண்டும் – பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
  • குடிமைப்பணி உத்தேச விதி திருத்தம் மாநில சுயாட்சிக்கு எதிரானது – பிரதமர் மோடி
  • தமிழ்நாட்டில் சிறிது குறைந்த கொரோனா பாதிப்பு – கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சமாக உயர்வு
  • தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை முதல் இயக்குனர் நாகசாமி காலமானார் - பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் 
  • சாலைப்பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற மத்திய அரசின் குற்றச்சாட்டிற்கு தமிழக அரசு மறுப்பு 

இந்தியா:

  • இந்தியாவில் சமூக பரவலாக மாறியது ஒமிக்ரான் வைரஸ் : மத்திய அரசின் பகுப்பாய்வு மையம் தகவல்
  • குடியரசுத்துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு கொரோனா தொற்று உறுதி - ஹைதராபாத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார்
  • நாடு முழுவதும் 9 மாதங்களில் 35 ஆயிரம் ரயில்கள் ரத்து – 41 ஆயிரத்திற்கும் அதிகமான ரயில்கள் தாமதமாக இயக்கம்
  • டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் முப்பரிமாண சிலை திறப்பு : பிரதமர் மோடி திறந்து வைத்தார்
  • சுதந்திரத்திற்கு பாடுபட்ட பல தலைவர்கள் மறக்கடிப்பு : கடந்த கால தவறுகளை திருத்துவோம் – பிரதமர் மோடி பேச்சு
  • நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டு : மலையாள முன்னணி நடிகர் திலீப்பிடம் 11 மணி நேரம் விசாரணை
  • உத்தரபிரதேசத்தில் கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் : சமாஜ்வாதி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்

உலகம் :

  • ஐரோப்பாவில் ஒமிக்ரான் பெருந்தொற்று 60 சதவீதம் பேரை பாதிக்கக்கூடும் – உலக சுகாதார அமைப்பு
  • ஒமிக்ரான் பாதிப்பு முடிந்த பிறகு கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வரும் – உலக சுகாதார அமைப்பு
  • கொரோனா விதிமுறைகளால் தன்னுடைய திருமணத்தையே ரத்து செய்த நியூசிலாந்து பிரதமர்
  • பூஸ்டர் தடுப்பூசிக்கு பதிலாக ஆண்டுக்கு ஒருமுறை கொரோனா தடுப்பூசி : பைஸர் சி.இ.ஓ.

விளையாட்டு :

  • தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஒயிட்வாஷ் ஆகியது இந்தியா
  • கேப்டவுனில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி : 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது தெ,ஆ.
  • மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஷிகர்தவான், விராட்கோலி, தீபக் சாஹர் போராடி அரைசதம் அடித்தது வீண்
  • இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியின் மகள் வாமிகா புகைப்படம் வைரல்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண