* பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட 15 கட்சி தலைவர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏற்பாடு செய்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
* தமிழ்நாட்டில் நேற்று 1908 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இதுநாள்வரையிலான கொரோனா பாதிப்பு 25,65,452 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் அரசு மருத்துவமனையில் 23 பேரும் தனியார் மருத்துவமனையில் 6 பேரும் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
* அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
* சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியானது.
* ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரத்து. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், புதிய சட்டம் கொண்டு வர தமிழ்நாடு அரசுக்கு எந்த தடையும் இல்லை என்றது.
* அதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டது தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
* தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யவிருக்கும் விவரம் குறித்த பதாகையினை இன்று வெளியிட்டார். அந்தப் பதாகையில், குருக்களின் பெயர்களும் அலைபேசி எண்களும் இடம்பெற்றுள்ளது.
* டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டி அரை இறுதி போட்டியில் இந்தியா – பெல்ஜியம் அணிகள் நேற்று மோதின. இதில், 5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதனால் ஃபைனல்ஸ் செல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஆட உள்ளது.
* டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்ற வீராங்கனை பி.வி.சிந்து நேற்று நாடு திரும்பினார். அவருக்கு மத்திய அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிஷண் ரெட்டி, அனுராக் தாகூர் ஆகியோர் பங்கேற்றனர்.
* இங்கிலாந்து-இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்க உள்ளது.
* உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியா? - சென்னை அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் இன்று அவசர ஆலோசனை
* தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் விளக்கம் அளித்தார்.
மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடனும், சுருக்கமாகவும், விளக்கமாகவும் அறிய:
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற