இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி.ஸ்ரீனிவாஸை காவல் துறையினர் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்ற வாகனத்தில் ஏற்றிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.


நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையில் இருந்து விஜய் சவுக் வரை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் இன்று (ஜூலை.26) பேரணியில் ஈடுபட்டனர்.


இப்போரட்டத்தின்போது முன்னதாக காவல் துறையினருக்கும் காங்கிரஸாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்ட நிலையில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி.ஸ்ரீனிவாஸ் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று காவல் துறையினர் வாகனத்தில் ஏற்றிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.


 






இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், நாடு முழுவதுமுள்ள காங்கிரஸ் கட்சியினர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


முன்னதாக மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தானும் மற்ற எம்.பி.க்களும் காவல் துறையினரால் தாக்கப்பட்டதாகவும் இது மோடி மற்றும் அமித் ஷா இருவரின் சதி என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.


முன்னதாக ராகுல் காவலில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி “பாஜகவின் சர்வாதிகாரம் இப்போது வெளியில் வந்துள்ளது.


 






நாடாளுமன்றத்தில் முக்கியப் பிரச்னைகளை விவாதிக்கவும் முடியாது, தெருவில் மக்கள் குரல் எழுப்பவும் முடியாது. ஆனால் நாங்கள் போராடி வெற்றி பெறுவோம்” என ட்வீட் செய்துள்ளார்.