வரும் டிசம்பர் மாதம், உங்கள் வங்கியின் கிளைக்குச் செல்லும் முன், எந்தெந்த நாள்களில் வங்கி செயல்படும், எந்தெந்த நாள்களில் செயல்படாது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.


இந்தியாவின் தலைமை வங்கியான ரிசர்வ் வங்கி டிசம்பர் மாதத்தின் சில நாள்களின் போது வங்கிகள் செயல்படாது என்று விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. எனினும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் தொடர்ந்து நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. 


இந்த டிசம்பர் மாதம் வங்கிகளுக்கு 16 நாள்களை விடுமுறையாக அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. இந்த விடுமுறைகளுள் 7 நாள்கள் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள விடுமுறைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது; பிற நாள்கள் வார இறுதி என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


எனினும், இந்த 16 நாள்களுக்கான விடுமுறை என்பது அனைத்து மாநிலங்களுக்குப் பொதுவாக இருக்காது. சில மாநிலங்களில் மாநில அரசு அறிவித்துள்ள விடுமுறை தினங்களின் அடிப்படையில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வங்கிகள் செயல்படாது எனக் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, கோவா மாநிலத்தின் புனித பிரான்சிஸ் சேவியர் விருந்து நிகழ்ச்சிக்காக வங்கிகள் விடுமுறை அளிக்கப்படும்; எனினும் அதே நாளின் போது ஹிமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதே விடுமுறை அளிக்கப்படாது. 


எனவே வங்கி விடுமுறை என்பது வெவ்வேறு மாநிலங்களின் விடுமுறைப் பட்டியலுக்கு ஏற்ப மாறுபடும்; மேலும் அனைத்து வங்கிகளும் இந்த நடைமுறையைப் பின்பற்றாமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. வங்கி விடுமுறைகள் என்பது அந்தந்த மாநிலங்களின் விடுமுறைப் பட்டியலுக்கு ஏற்ப பின்பற்றப்படுகிறது.



டிசம்பர் மாதத்தின் வங்கிகள் விடுமுறைப் பட்டியல் இது...


- டிசம்பர் 3 - புனித பிரான்சிஸ் சேவியர் விழா ( கோவா மாநிலத் தலைநகர் பனாஜியில் வங்கிகள் மூடப்படும்)


- டிசம்பர் 5 – ஞாயிற்றுக்கிழமை


- டிசம்பர் 11 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை


- டிசம்பர் 12 – ஞாயிற்றுக்கிழமை


- டிசம்பர் 18 – யு சோ சோ தாம் கீ இறந்த நாள் (மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்படும்)


- டிசம்பர் 19 – ஞாயிற்றுக்கிழமை


- டிசம்பர் 24 – கிறிஸ்துமஸ் பண்டிகை (மிசோரம் மாநிலத் தலைநகர் ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்)



- டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ் பண்டிகை (பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் தவிர அனைத்து இடங்களிலும் வங்கிகள் மூடப்படும்)


- டிசம்பர் 26 – ஞாயிற்றுக்கிழமை


- டிசம்பர் 27 – கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் (மிசோரம் மாநிலத் தலைநகர் ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்)


- டிசம்பர் 30 – யு கியாங் நோங்பா (மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்படும்)


- டிசம்பர் 31 – புத்தாண்டு கொண்டாட்டம் (மிசோரம் மாநிலத் தலைநகர் ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்)