தமிழ்நாடு :



  • 73வது குடியரசு தின விழா – சென்னையில் தேசிய கொடியை ஏற்றுகிறார் ஆளுநர்

  • சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்ட அணிவகுப்புக்கு ஏற்பாடு

  • குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு – மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான போலீசார் பாதுகாப்பு

  • நீட் தேர்வால் மருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்பு அதிகரிப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவி

  • மருத்துவ படிப்பில் சேர்வதற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் பொதுப்பிரிவில் விண்ணப்பித்திருந்தாலும் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் வாய்ப்பு

  • தமிழ் எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியம், நடிகை சவுகார் ஜானகி உள்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது

  • இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை தடுக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

  • தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு


இந்தியா:



  • நாடு முழுவதும் இன்று 73வது குடியரசு தின விழா கொண்டாட்டம் – டெல்லியில் தேசிய கொடியை ஏற்றுகிறார் ராம்நாத் கோவிந்த்

  • குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

  • குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் டெல்லியில் தீவிர பாதுகாப்பு

  • மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு

  • குலாம் நபி ஆசாத், சுந்தர்பிச்சை ஆகியோருக்கு பத்மபூஷண் விருது அறிவிப்பு

  • கச்சத்தீவு திருவிழா : கொரோனா பரவலை காரணம் காட்டி நடப்பாண்டிலும் இந்தியர்களுக்கு தடை


உலகம் :



  • உக்ரைன் எல்லையில் 1 லட்சம் படைவீரர்களை குவித்த ரஷ்யா

  • ரஷ்யாவை எதிர்கொள்ள ஆயத்தமாகும் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாட்டு படைகள்

  • உக்ரைன் – ரஷ்யா மோதல் விவகாரத்தில் உலக நாடுகள் மத்தியில் பரபரப்பான சூழல்

  • உலகம் முழுவதும் கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்தால் நடப்பாண்டிலே கொரோனா முடிவுக்கு வரும் - உலக சுகாதார மையம் 


விளையாட்டு :



  • ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பரம்விசிஷ்ட சேவா பதக்கம்

  • இந்தியாவில் ஸபாட் பிக்சிங் விவகாரம் - ஜிம்பாப்வே வீரர் பிரெண்டன் டெய்லர் அதிர்ச்சி அறிக்கை 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண