மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், மூத்த சிபிஎம் தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா பத்ம பூஷன் விருதை நிராகரித்துள்ளார்.
இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ) மத்திய அரசு இன்று அறிவித்தது. இதில், நான்கு பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 17 பேருக்கு பத்ம பூஷணும், 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருதுகள் பத்ம விருதுகள். பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ என மூன்று விருதுகள் வழங்கப்படுகின்றன.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, பொறியியல், அறிவியல், பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில்கள், குடிமை சேவை போன்ற துறைகளில் சாதனை செய்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
தலைசிறந்தும், அரிய வகையிலும் சேவையாற்றியவர்களுக்கு பத்ம விபூஷன், மிக உயரிய வகையில் தலைசிறந்து சேவையாற்றியவர்களுக்கு பத்ம பூஷன், எந்த துறையிலும் தலைசிறந்து பணியாற்றியவர்களுக்கு பத்மஸ்ரீ விருதும் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில்,
சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத், மறைந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டது
73வது குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் பட்டியலில் எதிர்க்கட்சிகளின் இரண்டு முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் சிபிஎம்- இன் முன்னாள் மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாசார்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இருவருக்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில், தனக்கு அறிவிக்கப்பட்ட் பத்மபூஷன் விருதை நிராகரிப்பதாக மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், சிபிஎம் மூத்த தலைவரான புத்ததேவ் பட்டாச்சார்யா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் , “பத்ம பூஷன் விருது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதுபற்றி யாரும் என்னிடம் கூறவில்லை. எனக்கு பத்ம பூஷன் விருது அளிப்பதாக கூறுகிறார்கள். அப்படி அளித்தால் அதனை ஏற்கமாட்டேன், நிராகரிப்பேன்" என்று அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்