புதுச்சேரி: புதுச்சேரியில் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் மீறினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கவிடுத்துள்ளது.
காவல் துறை சார்பில் செய்திகுறிப்பில் கூறியதாவது:
”நம் நாட்டில் தற்பொழுது கொரோனா வைரஸின் புதிய உருமாற்றம் கொண்ட ஒமிக்ரான் என்ற கிருமி தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரி அரசு அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறது. 'புதுச்சேரி நகராட்சியின் - கொரோனா கிருமி தொற்று மற்றும் நோய்த்தொற்று கட்டுப்பாடு (கோவிட்-19) விதிமுறை 2020' யின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி புதுச்சேரி காவல் துறையானது இந்த கோவிட் விதிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்துகிறது. இதனை மீறுபவர்கள் மீது ரூ.100 அபராதமாக விதிக்கப்படுகிறது.
பொது மக்கள் அனைவரும் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் கைகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது போன்ற 'கோவிட் கட்டுப்பாட்டு நெறிமுறைகள்' மூலம் இந்த புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸின் பரவுதலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் மேற்படி கோவிட் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், பொதுமக்கள் அனைவரும் ஆரம்ப சுகாதார மையங்கள், சமூக சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு நோய் பரவுதலை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எதிர்வரும் காலங்களில் மேற்கூறிய கோவிட் நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது புதுச்சேரி காவல் துறையானது கடுமையான சட்ட விதிமுறைகளை அமல்படுத்தும். எதிர்வரும் பண்டிகை காலங்களையும் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களையும் கருத்தில்கொண்டு, இந்த நோய்தொற்றை தடுக்க அரசுக்கு பொதுமக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் படிக்க : Today Headlines : பொங்கல் பஸ்...இன்றும் ஆதார் இணைப்பு... ஆஸி., வெற்றி... இன்னும் பல செய்திகள்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.