இந்தியா :
- புதிய வேளாண் சட்டங்கள் மூன்றும் ரத்து – பிரதமர் மோடி அறிவிப்பு
- வேளாண் சட்டங்கள் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதற்கு விவசாயிகள் மகிழ்ச்சி
- டெல்லியில் ஓராண்டு காலமாக போராடி வரும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் – பிரதமர் கோரிக்கை
- ஒரு தரப்பு விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களைப் பற்றி புரியவைக்க முடியாததால் வாபஸ் – பிரதமர் மோடி விளக்கம்
- போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம் – விவசாயிகள் சங்கம்
- வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் ரத்து செய்யும் வரையில் போராட்டம் தொடரும் – விவசாயிகள் அறிவிப்பு
தமிழ்நாடு :
- வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்ததற்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பு
- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் – மு.க.ஸ்டாலின்
- புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி
- விழுப்புரம், வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை – பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளம்
- வேலூர், பேரணாம்பேட்டில் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க தஞ்சமடைந்தவர்கள் வீடு இடிந்து உயிரிழப்பு – குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்த பரிதாபம்
- சுவர் இடிந்து உயிரிழந்த 5 பேர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் நிதி – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, சேலம், பெரம்பலூர் உள்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
- சூறைக்காற்று வீசும் என்பதால் குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் – வானிலை ஆய்வு மையம்
உலகம் :
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டதால் அமெரிக்காவின் தற்காலிக அதிபராக ஒன்றரை மணி நேரம் பதவிவகித்தார் கமலா ஹாரீஸ்
- ஆப்கானில் பெண்களுக்கான கல்வியை எதிர்க்கவில்லை – தலிபான் அரசு
- அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையே மோதல் போக்கு
விளையாட்டு :
- நியூசிலாந்து அணிக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்ற போட்டியில் இந்தியா அபார வெற்றி
- தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரும் அதிரடி அரைசதம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்