தமிழ்நாடு :



  • கடும் நிதி நெருக்கடியிலும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி முன்தேதியிட்டு வழங்கப்படுகிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

  • இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேரை விடுவிக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

  • சென்னை நந்தனத்தில் அம்மா வளாகத்தின் பெயர் மாற்றமா? அ.தி.மு.க. எதிர்ப்பு

  • சென்னை நந்தனத்தில் அம்மா வளாகம் என்ற பெயர் மாற்றப்படவில்லை – அமைச்சர் தங்கம் தென்னரசு

  • திருவாலங்காட்டில் விடிய, விடிய ஆருத்ரா அபிஷேகம் – காரைக்காலிலும் களைகட்டியது ஆருத்ரா தரசின விழா


இந்தியா :



  • வாக்காள அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேர்தல் சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல்

  • தேர்தல் சட்டத்திருத்த மசோதாவை அறிமுக நிலையிலே எதிர்க்க எதிர்க்கட்சிகள் முடிவு

  • தேர்தல் சட்டத்திருத்த மசோதாவை அனைவரின் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு

  • இந்தியாவிற்கு வருவதற்கு தனக்கு கிடைத்த மாபெரும் பரிசு என்று போப் பிரான்சிஸ் கூறினார் – பிரதமர் மோடி நெகிழ்ச்சி

  • சபரிமலை செல்வதற்கான எருமேலி பெருவழிப்பாதை திறப்பு – பக்தர்கள் மகிழ்ச்சி

  • சபரிமலையில் பக்தர்கள் நேரடியாக நெய் அபிஷேகம் செய்வதற்கு அனுமதி


உலகம் :



  • மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 21 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம்

  • பெல்ஜியம் நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டித்து பேரணி – ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

  • ஸ்பெயின் நாட்டிலும் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டித்து மாபெரும் பேரணி

  • பிலிப்பைன்சை சிதைத்த ராய் புயல் – உயிரிழப்பு 169 ஆக உயர்வு

  • பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது திடீரென ரசிகர்கள் ரகளை – போட்டி பாதியிலே ரத்து


விளையாட்டு :



  • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் கிடாம்பி ஸ்ரீகாந்த்

  • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மற்றொரு இந்திய வீரர் லக்‌ஷயா சென் வெள்ளிப்பதக்கம் வென்றார்

  • அடிலெய்ட் ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்திற்கு 468 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

  • இமாலய இலக்கை நோக்கி ஆடி வரும் இங்கிலாந்து 82 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தவிர்க்க போராட்டம்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண