தமிழ்நாடு :



  • தமிழ்நாட்டில் இன்று முதல் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளது

  • மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை 

  • 10ஆம் வகுப்பிற்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வானது பிப்ரவர் 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரையும், இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 28ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் நான்காம் தேதிவரையும் நடக்கும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது

  • தஞ்சை மாணவி மரணத்தில் சிபிஐ விசாரணை உண்மையை வெளிக்கொணரும் என மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

  • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் கட்சிகள் மும்முரம்


இந்தியா :



  • நாடாளுமன்றத்தின்  பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். 

  • இதைத் தொடர்ந்து இன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். 


உலகம் :



  • ஜப்பானிய போர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமானதால், தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

  • கனடாவில் கட்டாய தடுப்பூசி ஆணைக்கு எதிராக ஆயிரக்கணக்கான லாரி ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்திவருவதால் அசாதாரண சூழல் நிலவுகிறது.

  • எனவே பாதுகாப்பின்மையின் காரணமாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்தோடு ரகசிய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


விளையாட்டு :



  • 2022 இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்திற்கு முன்னதாக, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தங்கள் லோகோவை வெளியிட்டுள்ளது

  • மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டர் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, டி20 கிரிக்கெட்டில் மே.இ. தீவுகள் அணிக்காக முதலில் ஹாட்ரிக் வீழ்த்திய வீரர் என்ற சாதனை படைத்தார்

  • மேற்கிந்திய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் தோல்வியை தழுவியது

  • இதனால், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில், மூன்றில் வெற்றி பெற்று டி20 தொடரைக் கைப்பற்றி இருக்கிறது மேற்கிந்திய தீவுகள் அணி


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண