தமிழ்நாடு :
- சென்னைக்கு அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கத் தொடங்கியது
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடப்பதால் வட மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு
- இன்று கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெரியளவில் பாதிப்பு இருக்காது – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் – ஆரஞ்ச் எச்சரிக்கையை விடுத்தது வானிலை ஆய்வு மையம்
- திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை வரை மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்
- சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை – மெரினாவில் கடல் சீற்றம்
இந்தியா :
- புதுச்சேரியில் ஒரே நாளில் 17 செ.மீ. மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ரங்கசாமி நேரில் ஆய்வு
- பிட்காயின் இளைஞர்களை சீரழித்து விடும் : ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – பிரதமர் மோடி
- ஹைதர்போரா என்கவுண்டர் விவகாரத்தில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் – உமர் அப்துல்லா
- 580 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அரிய சந்திர கிரகண நிகழ்வு
- திருப்பதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தின் காரணமாக சாலைகள் மூடப்பட்டது
உலகம் :
- பாகிஸ்தானில் தொடர் பாலியல் குறறங்களில் ஈடுபடும் நபர்களுக்கு அறிவியல் முறையில் ஆண்மையை நீக்குவது உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் கட்டாயமாக்கப்படுகிறது.
- வங்கதேசத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்த பெண் நீதிபதி பதவி நீக்கம் – வங்கதேச அரசு நடவடிக்கை
விளையாட்டு
- ராஞ்சியில் இன்று நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
- ராஞ்சியில் இன்று நடைபெறும் போட்டியில் வென்று இந்தியா தொடரை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்