• கனமழையால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் சென்னையில் நேற்று இரவு மீண்டும் கனமழை

  • தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இரவு கனமழை – விருதுநகர், திருப்பூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி

  • திருநெல்வேலியில் கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது – நெல்லை தற்காலிக பேருந்து நிலையத்தில் குளம்போல தண்ணீர் தேங்கியது

  • வட தமிழக கடற்கரைப் பகுதியை ஒட்டி நகர்கிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

  • காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை பகுதிகளில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை

  • சென்னை மக்கள் இரண்டு நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள், குடிநீர் மற்றும் பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் – மாநகராட்சி வேண்டுகோள்

  • கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

  • கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

  • தமிழ்நாட்டில் இன்று 50 ஆயிரம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் – 9வது முறையாக நடைபெறும் மாபெரும் முகாம்

  • சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி துரைசாமி நியமனம் – புதிய தலைமை நீதிபதி பதவியேற்கும் வரை பதவி வகிப்பார் என அறிவிப்பு

  • பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

  • முதன்முறையாக பொங்கல் பரிசுத்தொகுப்பில் மக்களுக்கு முழுக்கரும்பு வழங்க உத்தரவு

  • குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் பணமும் வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

  • ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு – புகார் அளித்தபோதே முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜியும் மனு

  • நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் நவம்பர் 29-ந் தேதி தொடங்குகிறது – டிசம்பர் 23-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு

  • சட்டமன்றங்கள் அனுப்பம் கோப்புகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கு கால அவகாசம் நிர்ணயிக்கப்பட வேண்டும் – சபாநாயகர்கள் மாநாட்டில் தமிழக சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தல்

  • நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி : இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 பேஸ்புக் பக்கத்தில் தொடர


 ட்விட்டர் பக்கத்தில் தொடர


 யூட்யூபில் வீடியோக்களை காண