- கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கு பிறகு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை கூடுகிறது.
- நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு கூட்டத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம் – பிரதமர் மோடி பங்கேற்பு
- உச்சநீதிமன்ற வழக்கு விசாரணைகள் விரைவில் நேரடி ஒளிபரப்பு – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேச்சு
- 5 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதால் விரைந்து தீர்வு காண வலியுறுத்தல்
- கேரளாவில் ஏற்கனவே 30 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
- கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு அனுமதி – பிரான்ஸ் அரசு அறிவிப்பு
- டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஜப்பான் புறப்பட்டது இந்திய அணி – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நேரில் சென்று வழியனுப்பி வைத்தார்
- சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி – கோயில் நிர்வாகம் முடிவு
- சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்திருக்க வேண்டும் – கோயில் நிர்வாகம்
- கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கனமழை – வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி
- இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38 ஆயிரத்து 79 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி – மத்திய அரசு
- நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 560 பேர் கொரோனாவால் உயிரிழப்பு – மத்திய அரசு தகவல்
- சித்து- அம்ரீந்தர் சிங் மோதல் : சமாதனப்படுத்த காங்கிரஸ் தலைமை பேச்சுவார்த்தை
- மும்பையில் கனமழை – ரயில் நிலைய தண்டவாளங்களில் ஆறுபோல் ஓடிய மழை நீர்
- உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்டு நடப்பாண்டிற்கான கன்வர் யாத்திரை ரத்து – இந்து அமைப்புகள் அறிவிப்பு
- ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் பாகிஸ்தானில் கடத்தப்பட்டு சித்ரவதை – இந்திய அதிகாரிகள், குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
- ஒடிசாவில் வரும் 26-ந் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகள் தொடக்கம் – ஒடிசா அரசு அறிவிப்பு
- கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக வெளியான தகவல் வதந்தி – எடியூரப்பா பேட்டி
- கர்நாடகாவில் வரும் 26-ந் தேதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
- தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – காவல்துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
- சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு
- தமிழ்நாட்டில் புதியதாக 2 ஆயிரத்த 205 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி
- கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 43 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
Today Headlines | கனமழை எச்சரிக்கை.. கேரளாவில் அதிகரிக்கும் ஜிகா வைரஸ்.. இன்னும் சில முக்கியச் செய்திகள்!
சுகுமாறன்
Updated at:
18 Jul 2021 07:07 AM (IST)
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தலைப்புச்செய்திகள்
NEXT
PREV
Published at:
18 Jul 2021 07:07 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -