- மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை மனு அளிக்க தமிழக அரசின் சார்பில் அனைத்துக்கட்சி குழு இன்று டெல்லி பயணம்
- மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்ற தீர்மானத்தை ஜல்சக்தி அமைச்சரிடம் நேரில் வழங்க முடிவு
- சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை
- மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் இன்று சந்திப்பு – கூடுதல் தடுப்பூசிகள் வழங்க நேரில் வலியுறுத்தல்
- மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட், கிரெடிட் கார்டுகளை இந்தியாவில் வழங்கத் தடை – ரிசர்வ் வங்கி நடவடிக்கை
- ஜம்மு – காஷ்மீர் புல்வாமாவில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
- விண்கலத்தில் பயன்படுத்தப்படும் விகாஸ் என்ஜின் சோதனை வெற்றி – இஸ்ரோ தகவல்
- ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுக்கச் செல்லத்தக்கது என்று அறிவிக்க வேண்டும் – முதல்வருக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். கோரிக்கை
- தமிழ்நாட்டில் புதியதாக 2 ஆயிரத்து 458 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு
- தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 59 பேர் கொரோனா வைரசால் உயிரிழப்பு
- சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைக்காக புதியதாக 6 மருத்துவ கல்லூரிகள்
- ஜிகா வைரஸ் எதிரொலி : வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி வர இ- பாஸ் கட்டாயம்
- 12ம் வகுப்பு மதிப்பெண்கள் சரிபார்ப்பு பணிகள் நிறைவு – ஓரிரு நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு
- ஸ்கிம்மர் கருவி மூலம் ஏ.டி.எம். மோசடி – சென்னை அருகே 3 பேர் கைது
- சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தை தாமே தூய்மை செய்வதாக தலைமை நீதிபதி அறிவிப்பு
- கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு புதுவை முதல்வர் ரங்கசாமி எதிர்ப்பு – பிரதமர், உள்துறை அமைச்சர், ஜல்சக்தி துறை அமைச்சருக்கு கடிதம்
- புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு – கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்
- புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து வகை மதுபான விலை 20 சதவீதம் அதிகரிப்பு
- நாசிக்கில் பணம் அச்சடிக்கும் இடத்தில் 6 மாதங்களில் ரூபாய் 5 லட்சம் மாயம் – தீவிர விசாரணை
- கொரோனா மூன்றாவது அலையைத் தடுப்பதற்கு மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
- மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்வு
- தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்வதற்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
Morning Wrap | 15.07.2021 - இன்றைய தலைப்புச் செய்திகள்
சுகுமாறன்
Updated at:
15 Jul 2021 07:03 AM (IST)
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
காவிரி_ஆறு_(1)
NEXT
PREV
Published at:
15 Jul 2021 07:03 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -