• தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்

  • உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9-ந் தேதி நடைபெற உள்ளது

  • உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் நாளை முதல் தொடக்கம்

  • உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ந் தேதி நடைபெற உள்ளது.

  • நாட்டின் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் தலைதூக்கும் அபாயம் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

  • டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

  • டெங்கு காய்ச்சல் தடுப்பு குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும் – மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

  • ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும் – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐ.நா. சபையில் உறுதி

  • ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கெடுபிடியால் 153 ஊடக நிறுவனங்கள் தங்களது சேவையை நிறுத்தியது

  • ஆப்கானிஸ்தானில் ஆண்களுடன் இணைந்து பெண்கள் பணிபுரிய அனுமதிக்க முடியாது – தலிபான்கள் திட்டவட்டம்

  • ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபர் சலே-வின் வீட்டில் இருந்து ரூபாய் 48 கோடி ரொக்கம் பறிமுதல் – தலிபான்கள் தகவல்

  • அண்டை நாடுகளின் எல்லையில் பசி, பட்டினியோடு ஆப்கானிஸ்தான் மக்கள் காத்திருப்பு – உலக நாடுகள் வேதனை

  • பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

  • மாணவர்களின் கல்வித்திறனை வளர்ப்பது தொடர்பாக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுரை

  • இந்தியாவில் இதுவரை 75 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – இந்தியாவிற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

  • விழுப்புரத்தில் அரசுப்பள்ளியில் ஆசிட் கொட்டியதில் மாணவிகள் காயம் – தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

  • கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  • நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்

  • நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் தொடரும் – சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

  • வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது

  • மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மசூதிக்கு சென்று திடீர் வழிபாடு

  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்கு விரைவில் இணையவழியில் இலவச தரிசன டிக்கெட்

  • அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்கள் நவீன கருவிகள் மூலம் கண்டுபிடிப்பு