• சென்னையில் கடந்த 16 மணிநேரத்திற்கும் மேலாக பல்வேறு இடங்களிலும் கனமழை தொடர்ந்து பெய்கிறது.

  • தி.நகர், ராயபுரம், ராயப்பேட்டை, திருவான்மியூர், சைதாப்பேட்டை, அரும்பாக்கம், அமைந்தகரை, வடபழனி, நந்தனம்,நுங்கம்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் கடுமையாக பெய்து வருகிறது கனமழை

  • சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிப்பு 

  • சென்னை புறநகரிலும் தொடர் கனமழை – அதிகாலை 4 மணி வரை மட்டுமே எண்ணூரில் 15 செ.மீ. மழைப்பதிவு

  • காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அதிகனமழை

  • காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இன்று மாலை வரை மழை நீடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

  • வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது

  • அதிகனமழை எச்சரிக்கையால் மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு பொதுமக்கள் செல்லத் தடை

  • தமிழ்நாட்டில் உள்ள 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

  • தொடர்ந்து பெய்து வரும் மழையால் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

  • திருவாரூரில் தொடர் கனமழை காரணமாக 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது – தஞ்சையில் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் மூழ்கியது

  • கடலூரில் தொடர்ந்து பெய்துவந்த கனமழையால் 25 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது – கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்ட 1000 கோழிக்குஞ்சுகளும் பலி

  • மழை பாதிப்பு குறித்து முழுமையாக ஆய்வு செய்த பிறகு மத்திய அரசிடம் நிவாரணம் கோரப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து வைகை அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

  • தெற்கு அந்தமான் அருகே நவம்பர் 13-ந் தேதி புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

  • உலககோப்பை டி20 தொடரில் அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து – முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண