தமிழ்நாடு :
- ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைப்பு : ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க உத்தரவு - முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
- ரூ. 14. 71 கோடி மதிப்பிலான 93 போக்குவரத்து காவல் ரோந்து வாகன சேவை : முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 45 டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
- தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை நாளை மறுநாள் திறக்க ஏற்பாடு : மாணவர்கள் சேர்க்கைக்கு நடைபெறுகிறது.
- டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல் படுத்தக் கூடாது : தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
இந்தியா :
- நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வருகிற 23 ம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
- குடியரசு தலைவர் தேர்தலில் திடீர் திருப்பம் : பொது வேட்பாளரை நிறுத்த சோனியா காந்தி திட்டம்
- ராஜ்யசபா தேர்தலில் விதிகளை மீறியதாகக் கூறி மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல்
- ராஜ்யசபா தேர்தலில் ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் போட்டியிட்ட நான்கு இடங்களில் 3 இடங்களை கைப்பற்றியது. கர்நாடகாவில் பாஜக மூன்று இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்தைப் பெற்றுள்ளது.
உலகம் :
- அமெரிக்கா சர்வதேச பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என் அந்நாட்டு அறிவித்துள்ளது.
- வடகொரியாவில் இருந்து காற்று மூலம் கொரோனா வைரஸ் சீனாவுக்குள் பரவக்கூடும் எனக்கூறி வீட்டின் ஜன்னல்களை மூடி வைக்குமாறு மக்களுக்கு சீனாவின் தான்தோங் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
- பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க் கோரிக்கை
விளையாட்டு :
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பத்தாண்டிற்கான டி20 அணியில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பிடித்துள்ளார்.
- ஆறு முறை உலக சாம்பியனுமான மேரி கோம் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
- 2017ஆம் ஆண்டு 163 பில்லியன் ரூபாய்க்கு ஏலம் போனநிலையில் தற்போது 600 பில்லியன் ரூபாய் (7.7 பில்லியன் டாலர்) வரை ஏலத்தொகை செல்லலாம் என எதிர்பார்ப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்