தமிழ்நாடு:



  • டிஜிட்டல் பணபரிவர்த்தனை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் நிதிநுட்பத்துறை மிகப்பெரிய வளர்ச்சி பெறும் - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

  • 12 மணி நேரத்திற்கும் மேலாக நின்றவாறே பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு விருதுகளை வழங்கிய நடிகர் விஜய் - காசு வாங்கிக்கொண்டு ஓட்டுபோட வேண்டாம் என அறிவுரை

  • மணிக்கணக்கில் காத்திருந்து விருதுகளை பெற்ற மாணவர்கள் - ரஞ்சிதமே ஸ்டைலில் முத்தம் கொடுத்து விழாவை நிறைவு செய்த நடிகர் விஜய்

  • ராமநாதபுரத்தில் திமுக எம்.பி மற்றும் அமைச்சர் இடையே கடும் வாக்குவாதம் - மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு

  • அச்சமின்ற் ஆட்சிபுரிய பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும் - பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேச்சு

  • சர்வதேச நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற உரிமம் வழங்குவதில் சட்டவிரோதம் இல்லை - அரசாணை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

  • தமிழகத்தில் சோலார், காற்றாலைகள் மூலம் தலா நான்காயிரம் மெகாவாட் மின் உற்பத்தி - எரிசக்து துறை அதிகாரிகள் தகவல்

  • விழுப்புரத்தில் 3 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்துகொண்ட தாய் - காணவன் இறந்த 3 நாட்களில் விபரீத முடிவு


இந்தியா:



  • சவாலான சூழலிலும் மக்களுடன் நிற்போம் என்று காட்டியது ஆப்ரேஷன் கங்கா திட்டம் - பிரதமர் மோடி பெருமிதம் 

  • இரண்டு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி - 20 முதல் 25ம் தேதி வரையில் அமெரிக்கா மற்றும் எகிப்தில் சுற்றுப்பயணம்

  • பொதுத்துறை நிறுவனங்களை அழித்து அரசு வேலைவாய்ப்புகளை ஒன்றிய அரசு பறித்துவிட்டது - மேக் ந் இந்தியா திட்டத்தின் மூலம் நாட்டிற்கு கிடைத்தது என்ன என மல்லிகர்ஜுன கார்கே கேள்வி

  • மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் சிங்கை காப்பாற்ற முயற்சிக்கிறது மத்திய அரசு - விவசாய சங்க தலைவர் குற்றச்சாட்டு

  • IRCTC-க்கு போட்டியாக ரயில் டிக்கெட் விற்பனையில் கால் பதிக்கிறது அதானி குழுமம் - ஆன்லைன் டிக்கெட் விற்பனை நிறுவனமான ஸ்டார்க் எண்டர்பிரைசஸின் 100% பங்குகளை வாங்குகிறது

  • முதலாவது பிரிவு அக்னி வீரர்களின் பயிற்சி காஷ்மீரில் நிறைவடைந்தது

  • பீகாரில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் விபரீதம் - மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

  • பெங்களூருவில் 8 வயது சிறுமியின் புகாரால் டெலிவெரி பாய்க்கு தர்ம அடி - சிசிடிவியால் வெளிவந்த உண்மையால் அதிர்ச்சி


உலகம்:



  • சூடானில் நடந்த வான்வழித் தாக்குதல் 5 குழந்தைகள் உட்பட 17 பேர் பலி

  • உக்ரைனின் 3 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது - ரஷ்யா தகவல்

  • அமெரிக்காவில் 3 மகன்களை வரிசையாக நிற்க வைத்து  சுட்டுக்கொன்ற தந்தை - அதிருஷ்டவசமாக உயிர்தப்பிய மகள்

  • பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கியது சீனா

  • உகாண்டாவில் பள்ளி மீது ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் பயங்கர தாக்குதல் - 41 பேர் பலி

  • லெபனானின் வங்கிகள் சூறையாடல் - டெபாசிட் பணத்த திரும்ப கொடுக்காததால் பொதுமக்கள் போராட்டம் 


விளையாட்டு:



  • உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி - சாம்பியன் பட்டம் வென்ற எகிப்து அணிக்கு கோப்பை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

  • ஆஷஷ் தொடரின் முதல் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவு - இங்கிலாந்தை காட்டிலும் 82 ரன்கள் பின்தங்கியுள்ள ஆஸ்திரேலியா

  • உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் இன்று தொடக்கம் - இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்பு’

  • டி.என்.பி.எல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு போட்டிகள் - சேலம்-திருச்சி அணிகளும், திண்டுக்கல் - மதுரை அணிகளும் மோதல்