தமிழ்நாடு:



  • சென்னை கிண்டியில் கருணாநிதி பெயரில் 376 கோடி ரூபாய் செலவில் அதிநவீன மருத்துவமனை - முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார் 

  • மருத்துவமனை திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை வரவிடாமல் தடுத்து விட்டனர் - கருணாநிதி வழியில் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம் என முதலமைச்சர் பேச்சு

  • அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கவேண்டும் என முதலமைச்சருக்கு ஆளுநர் கடிதம் எழுதியதன் பின்னனி என்ன? - பாஜகவின் ஏஜெண்டை போல ஆளுநர் செயல்படுவதாக அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு

  • செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியா? - மாவட்ட முதன்மை நீதிமன்றம்  இன்று தீர்ப்பு

  • சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி

  • செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் - ஆளுநர் ரவியை சந்தித்து அதிமுக தரப்பு கோரிக்கை 

  • திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு - பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஜுலை 14ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு


இந்தியா:



  • குஜராத்தில் கரையை கடந்தது பிபர்ஜாய் புயல் - 22 பேர் காயம் இருளில் மூழ்கிய 940 கிராமங்கள் - விவரங்களை முதலமைச்சரிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி

  • வீர மரணம் அடைந்த அமைதிப்படையினருக்கு ஐ.நா. தலைமையகத்தில் நினைவுச் சின்னம் - பிரதமர் மோடி

  • டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகத்தில் ஜவஹர்லால் நேருவின் பெயர் நீக்கம் - பிரதமர்கள் அருங்காட்சியகம்  என்று பெயரை மாற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • ஊரடங்கிற்கு மத்தியிலும் மணிப்பூரில் கலவரம் நீடிப்பு - துப்பாக்கிச்சூட்டில் பலர் காயம்

  • மணிப்பூரில் நிலமை கவலைக்கிடமாக உள்ளது - மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வேதனை

  • காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் இந்தியாவில் பேஸ்புக் முழுமையாக முடக்கப்படும் - கர்நாடக உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

  • ஜுலை 1ம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரையில் தோசை, பர்கர் உள்ளிட்ட 40 உணவு பொருட்களுக்கு தடை - ஆரோக்கியமான உணவுகளை எடுத்துச் செல்ல பரிந்துரை


உலகம்:



  • கனடாவில் பயணிகள் பேருந்து மீது டிரெய்லர் லாரி மோதிய விபத்தில் 15 முதியவர்கள் பலி

  • அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீல் சேரில் வந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்த போப் பிரான்சிஸ்

  • மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை - அதிரவைத்த வடகொரியா

  • பெரு நாட்டில் தீப்பிடித்த கட்டிடத்தில் இருந்து 25 நாய்களை காப்பாற்றிய இளைஞர் - ஹீரோ என அழைத்து குவியும் பாராட்டுகள்

  • ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பாலியல் தொல்லை - பெண் எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டு

  • மனித உடலுறுப்புகள்  திருடி விற்பனை - ஹார்வர்ட் மருத்துவ கல்லூரி பிணவறை மேலாளர் கைது 


விளையாட்டு:



  • முதன்மை ஸ்பான்சருக்கான டெண்டரை அறிவித்தது பிசிசிஐ - குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு தடை

  • பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஹைப்ரிட் முறையில் நடைபெறும் ஆசியகோப்பை தொடர் - ஆகஸ்ட் 31ம் தேதி தொடக்கம்

  • இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் - காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் பிரனாய் 

  • திருப்பூரை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்