டெல்லி முகர்ஜி நகரில் உள்ள ஐ.ஏ.எஸ்.பயிற்சி மையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு டெல்லியின் முகர்ஜி நகரில் அமைந்துள்ள மூன்றடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் Sanskriti ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் குடியிருப்பு பகுதிகளும் உள்ளன. இந்த கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மற்ற இடங்களுக்கும் பரவ தொடங்கியதால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. தகவலறிந்து 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதற்குள் கரும்புகையால், மூச்சு திணறல் எற்பட்டு மாணவர்கள் ஜன்னல் வழியாக தப்பிய வீடியோ சமூக வலைதளங்களீல் வைரல் ஆனது. பின்னர், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கயிறுடன் மாணவர்கள் வெளியேறினர்.
ஜன்னல் வழியாக வெளியெறிய மாணவர்கள் சுவரில் இருந்த ஏசி. இயந்திரங்கள் மீது குதித்து அங்கிருந்து தப்பினர். தீயணைப்பு வீரர்கள் சரியான நேரத்திற்கு சென்றதால், பெரிதாக பாதிப்புகள் ஏதும் இல்லை. 50-க்கும் மாணவர்கள் காயமடைந்ததாகவும், யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காராணமாக தீ விபத்து ஏற்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். 61 மாணவர்கள் மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.