தமிழ்நாடு:
* மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.
* அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கார்த்திக் காரை பரிசாக வென்றார்.
* சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக புவியரசனுக்கு பதிலாக செந்தாமரைக்கண்ணன் நியமனம்.
* தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு - வானிலை தகவல்
* நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து தமிழ்நாடு அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு வலியுறுத்தல்
* பொங்கல் விடுமுறைகளுக்குப் பிறகு எடுக்கப்படும் பரிசோதனையில் கொரோனா எண்ணிக்கை உயர வாய்ப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்தியா:
* புகழ்பெற்ற கதக் நடன கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்
* டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்திகள் நிராகரிப்பு.
* பஞ்சாப்பில் ஸ்ரீகுருரவிதாஸ் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிக்கு பதிலாக பஞ்சாப் தேர்தல் வரும் பிப்ரவரி 20ம்தேதி ஒரே கட்டமாக நடைபெறும் - இந்திய தேர்தல் ஆணையம்
* எஃகு ஆலைக்கு எதிரான போராட்டம் - கிராம மக்கள் மீது தடியடி நடத்திய ஒடிசா காவல்துறை
உலகம்:
* அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் வெடிகுண்டு தாக்குதல் - 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு
* இந்தியா செல்வந்தர்களுக்கான நாடு? - வெளியான ஆக்ஸ்பாம் அறிக்கையின் அதிர்ச்சித் தகவல்.
விளையாட்டு:
* கோலிக்கு பிறகு ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியை வழி நடத்தவேண்டும் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
* விராட்கோலி பக்குவமானவர்; ஆனால், ஈகோவை விட்டுத்தர வேண்டும் - கபில்தேவ்
* வரும் தலைமுறையின் உண்மையான தலைவர் கோலி - பாகிஸ்தான் முன்னாள் வேக பந்துவீச்சாளர் முகமது அமீர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்