Breaking LIVE: உக்ரைன் விவகாரம் : மாணவர்கள் படிப்பை தொடர அனுமதி தேவை - முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம்

Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.

ABP NADU Last Updated: 07 Mar 2022 02:19 PM
17 நாடுகளை நட்புப் பட்டியலில் இருந்து நீக்கியது ரஷ்யா

உக்ரைன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு பட்டியலில் இருந்து நீக்கியது ரஷ்யா

டி.கல்லுப்பட்டி பேரூராட்சி அதிகாரி பணியிடை நீக்கம்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் 10-வது வார்டு தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த அதிகாரி பணியிடை நீக்கம். அழுத்தம் காரணமாக மாற்றி அறிவித்ததாக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாட்கள் காவல்

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்குமாறு சிபிஐ அனுமதி கேட்டிருந்தது

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு விவகாரம் - சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்..

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு விவகாரம் - சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்..

உக்ரைன் விவகாரம் : மாணவர்கள் படிப்பை தொடர அனுமதி தேவை - முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம்

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள், தங்களின் படிப்பை இந்தியாவிலேயே தொடர அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடி - உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி பேச்சு

ரஷ்யா - உக்ரைன் இடையேயான நேரடி பேச்சுவார்த்தையை பிரதமர் மோடி பாராட்டியதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், உக்ரைனில் தற்போதைய நிலவரம் குறித்து அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கியிடம் கேட்டறிந்தார். 

மிதமான மழைக்கு வாய்ப்பு -  வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு -  வானிலை ஆய்வு மையம்

உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் முறையீடு

பார்களை 6 மாதங்களுக்கு மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் உயர் நீதிமன்றத்தில் முறையீடு

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் போன்ற  4 பிரிவுகளின் கீழ் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திமுக, அதிமுக கவுன்சிலர்கள் 15 பேர் மீது வழக்கு

கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் 15 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 

தொண்டர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் : சசிகலா

தொண்டர்களின் எதிர்பார்ப்பு, ஏக்கங்கள், ஆசைகள் விரைவில் நிறைவேறும் என சசிகலா தெரிவித்துள்ளார். 

ஆறுமுகசாமி ஆணைய விசாரணை மீண்டும் தொடக்கம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஆறுமுகசாமி ஆணைய விசாரணை மீண்டும் தொடங்கியது. 

உக்ரைனில் 4 நகரங்களில் போர் நிறுத்தம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 12வது நாளாக நீடித்து வரும்நிலையில், பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் வேண்டுகோளை ஏற்றது ரஷ்யா, அதன் அடிப்படையில், குடிமக்களை வெளியேற்ற அனுமதிக்கும் வகையில், Kyiv, Kharkov, Mariupol மற்றும் Sumy நகரங்களில் போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. 

திமுக வேட்பாளர் பதவி விலக வலியுறுத்தி ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரசார் தியானம்

காங்கிரசுக்கு திமுக தலைமை ஒதுக்கிய ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவியைக் கைப்பற்றிய திமுக நகர செயலாளரின் மனைவி சாந்தி, முதலமைச்சர் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று அவர் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் கட்சியினர் நூதன முறையில் தியான ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் முதல் முறையாக தூத்துக்குடியில் சர்வதேச அறைகலன் பூங்கா..

"சர்வதேச அறைகலன் பூங்கா"வின் மூலம் 8 ஆண்டுகளில் 3.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் புதிய தொழில்கள் துவங்க ரூ.4,755 கோடி முதலீட்டில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளது. 


இதன் மூலம்  நேரடியாக 17 ஆயிரத்து 476 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கு முதலமைச்சர் அடிக்கல்

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 1, 150 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள பர்னிச்சர் பூங்காவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். 

சர்ரென உயர்ந்த தங்கம் விலை..

சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 970 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 39 ஆயிரத்து 760 க்கு விற்கப்பட்டது.  இந்த நிலையில், இன்று ஒரு கிராம் தங்கம் ரூபாய் 85 அதிகரித்து ரூபாய் 5 ஆயிரத்து 55க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 680 அதிகரித்து ரூபாய் 40 ஆயிரத்து 440க்கு விற்கப்படுகிறது. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிவு

இன்று காலை நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு சென்செக்ஸ் 1439 புள்ளிகள் சரிந்து 52,893 புள்ளிகளாகவும், நிஃப்டி 405 புள்ளிகள் குறைந்து 15,893 புள்ளிகளாக உள்ளது. 

ஸ்ரீநகர் மார்க்கெட்டில் கையெறி குண்டு வீச்சு : 2 பேர் பலி

ஸ்ரீநகர் அருகே அமைரா கடல் மார்க்கெட்டில் கையெறி குண்டு வீச்சு தாக்குதல் : 2 பேர் பலி 

இந்தியாவில் 100க்கு கீழ் குறைந்த ஒருநாள் கொரோனா பலி

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 66 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

நாடுமுழுவதும் 54,118 பேருக்கு கொரோனா சிகிச்சை

நாடுமுழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 54,118 ஆக குறைந்துள்ளது. 

மிதக்கும் சூரியமின்சக்தி ஆலையை இன்று திறக்கிறார் முதலமைச்சர்

தூத்துக்குடி ஸ்பிக்ஸ் நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சூரியமின்சக்தி ஆலையை இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 

உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி இன்று பேச்சு..

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். 

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை..

திருவாரூர், குடவாசல், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

School leave : மயிலாடுதுறையில் இன்று 1 - 8 ம் வகுப்புக்கு விடுமுறை

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 1 முதல் 8 ம் வகுப்பு வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

பாலஸ்தீன இந்திய தூதர் மரணம் : வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் இரங்கல்

பாலஸ்தீன இந்திய தூதர் முகுல் ஆர்யா மறைவிற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Background

தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் விலை ரூ. 10 முதல் ரூ. 80 வரை உயர்த்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசு ஆண்டுக்கு, ரூ. 4,396 கோடி அதிகமாக வருமானம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மதுவிலக்கு ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்துவதால் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்கிறது. இதன் காரணமாக மதுபானங்களின் விலை இன்று முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் மதுவகைக்கு ரூ. 10. 35 கோடியும், பீர்வகைக்கு ரூ. 1. 76 கோடி கூடுதலாக வருவாய் வர வாய்ப்பு இருக்கிறது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.