Breaking LIVE: உக்ரைன் விவகாரம் - பிரதமர் மோடி சற்று நேரத்தில் ஆலோசனை
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளார். டெல்லியில் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பது, அங்குள்ள இந்தியர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று புதியதாக 223 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 50 ஆயிரத்து 817 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 596 பேர் கொரோனாவால் சிகிச்சை பெற்ற நிலையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் கொரோனா தொற்று காரணமாக 1 நபர் உயிரிழந்துள்ளார். சென்னையில் இன்று அதிகபட்சமாக 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி-ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து திமுகவை சேர்ந்த செல்வரத்தினம் ராஜினாமா
கூட்டணிக்கு எதிராக போட்டியிட்டு வென்ற திமுகவினர் பதவி விலக வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்
சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவுபெற்றது.
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. தமிழக பட்ஜெட், தொழில் வளர்ச்சி, மின் விநியோகத் திட்டம் குறித்து ஆலோசனை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. தமிழக பட்ஜெட், தொழில் வளர்ச்சி, மின் விநியோகத் திட்டம் குறித்து ஆலோசனை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், உக்ரைனின் சுமி நகரில் உள்ள இந்திய மாணவர்கள் வெளியேற வேண்டாம் எனவும், உக்ரைனில் உள்ள எஞ்சிய இந்திய மாணவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவர் என்றும் இந்திய மாணவர்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கர்நாடகாவுக்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக பா.ஜ.க.வின் 8 மாவட்டங்களுக்கான மாவட்ட தலைவர்கள் உள்பட நிர்வாகிகள் முழுமையாக கலைக்கப்படுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
அதிமுகவை சசிகலாதான் தலைமையேற்று நடத்த வேண்டும். என் விருப்பப்படிதான் சசிகலாவை சந்தித்தேன். சந்திப்பு குறித்து அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவிக்கவில்லை - ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா
அதிமுகவை சசிகலாதான் தலைமையேற்று நடத்த வேண்டும். என் விருப்பப்படிதான் சசிகலாவை சந்தித்தேன். சந்திப்பு குறித்து அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவிக்கவில்லை - ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா
அதிமுகவை சசிகலாதான் தலைமையேற்று நடத்த வேண்டும். என் விருப்பப்படிதான் சசிகலாவை சந்தித்தேன். சந்திப்பு குறித்து அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவிக்கவில்லை - ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா
தமிழ்நாட்டில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான போரை மனிதாபிமான அடிப்படையில் தற்காலிமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டிக்கும் விதமாக, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த திரைப்படங்களைத் தயாரிப்பதற்கும் வெளியிடுவதற்கும் தற்காலிகமாகத் தடை செய்து அறிவித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர் வரத்து 461 கன அடியில் இருந்து 450 கன அடியாக குறைந்தது.
சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 23 வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் துவங்கியது.
இந்தியாவில் ஒரேநாளில் 5, 921 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்குவது, பட்ஜெட் ஒப்புதல் குறித்து ஆலோசிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் எவ்வித மாற்றமுமின்றி விற்கப்படுகிறது. தொடர்ந்து 121-வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது.
மணிப்பூர் மாநில சட்டபேரவை தேர்தலில் 2வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குபதிவு 22 தொகுதிகளில் தொடங்கியது.
Background
கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுபவர் ஷேன் வார்னே(52). நேற்று இவர் மாரடைப்பு காரணமாக தாய்லாந்தில் காலமானார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -