Breaking LIVE: ரஷ்யா - உக்ரைன் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. உக்ரைனுக்குள் நுழைந்து 8ஆவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தும் நிலையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போதைய சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, உக்ரைனில் அமைதி திரும்பும் என்று நம்புகிறோம் என ரஷ்யா வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சம் தொடும் நிலை: பெட்ரோல், டீசல் விலையுயர்வு அபாயம்
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சம் தொடும் நிலை: பெட்ரோல், டீசல் விலையுயர்வு அபாயம்
உக்ரைனில் மாணவர்கள் மீட்பு : பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு, 2.21 ஏக்கர் பரப்பளவில், 39 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் நினைவிடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
இந்திய மாணவர்களுக்கு உதவ தயார் - போலந்து அரசு அறிவிப்பு..
மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் அவரவர் வகுப்புகளைத் தொடர உதவுவதாக போலந்து அரசு அறிவித்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி முறைகேடு : ஒரு நபர் ஆணையம் நியமனம்
ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு
கார்கிவ் நகரில் இருந்து நடந்தாவது வெளியேறுங்கள்.. இந்திய மாணவர்களிடம் கோரிக்கை வைக்கும் மத்திய அரசு
உக்ரைனில் மேலும் ஒரு மாணவர் மரணம்.. உடல் நிலை பாதிப்பால் மரணம் என தகவல் பரவி வரும் நிலையில், தாக்குதலும் காரணம் என சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உக்ரைனின், கார்கிவ் நகரில் இருந்து இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறவும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ரஷ்ய படைகள் உக்கிரமாக தாக்குதல் நடத்திவரும் வேளையில் இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது
211 ரஷ்ய பீரங்கிகள் அழிக்கப்பட்டுள்ளன - உக்ரைன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் துபாய் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதலீடுகளை ஈர்க்க முதன்முறையாக வெளிநாட்டுக்கு பயணிக்கிறார். 192 நாடுகள் பங்கேற்கும் துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு சார்பில் அரங்கு அமைக்கப்படவுள்ளது.
ரஷ்ய - உக்ரைன் பதற்றம் - தங்கம் சவரனுக்கு 616 ரூபாய் விலை உயர்வு
தமிழ்நாட்டில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
உக்ரைன் நாட்டில் ரஷ்யா இன்று நடத்திய தாக்குதலில் இருவர் பலி மற்றும் 16 பேர் காயம் அடைந்துள்ளதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நாகை, மயிலாடுதுறை, கடலூர், காரைக்காலில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
நாகை, மயிலாடுதுறை, கடலூர், காரைக்காலில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 4ம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
உக்ரைன் நாட்டில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் தொழில் நிறைந்த கெர்சன் நகரை ரஷ்யா தன்னுடைய முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வரும் 7ஆம் தேதி முதல் மீண்டும் அறுமுகசாமி ஆணையம் விசாரணை தொடங்க உள்ளது. அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த 10 மருத்துவர்கள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளனர்.
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
10,11,12ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு 24.04.2022 அன்று தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மே 6 முதல் மே 30ஆம் தேதிவரை 10 வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.
மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும்.
மே 6 முதல் மே 31 ஆம் தேதி வரை 11 ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும்.
ஜூன் 23ஆம் தேதி 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
ஜூன் 17ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
ஏப்ரல் 25 முதல் மே 2 வரை செய்முறைத்தேர்வுகள் நடைபெறும்.
22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு 39 ஆயிரம் ரூபாய்க்கு இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 616 ரூபாய் அதிகரித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்களின் பதவியேற்பு தொடங்கியுள்ளது.
ராணிப்பேட்டையில் திமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது. ஏ.வி.சாரதி என்பவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
RRR படமும் மார்ச் 25ம் தேதி வெளியாகவுள்ளதால் டான் படத்தை மே மாதம் 13ம் தேதி வெளியிட படக்குழு முடிவு
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனவுக்கு 223 பேர் உயிரிழப்பு. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 85,680 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் 14,120 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் தொடங்கியது
கச்சா எண்ணெய் விலை 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது 106 டாலர் ஆக உயர்ந்துள்ளது. கடைசியாக 2014ஆம் ஆண்டு கச்சா எண்ணெயின் விலை இப்படி உயர்ந்திருந்தது.
உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகளுடன் அமெரிக்கப் படைகள் நேரடியாக மோதாது - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்காவில் ரஷ்யாவின் விமானங்கள் பறக்க தடை விதித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
உக்ரைன் நாட்டில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் மரணமடைந்தார். கர்நாடகாவைச் சேர்ந்த அந்த மாணவரின் உடலை இந்தியா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பிப்ரவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் 1.33 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் 1.40 கோடி ரூபாயாக இருந்தது.
உக்ரைன் நாட்டின் தலைநகரான கிவ் நகரில் இருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேற்றப்பட்டதாக மத்திய அரசு தகவல்.
விரைவில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்விற்கான அட்டவணை வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
10,11மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான அட்டவணை இன்று வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
Background
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த மாதம் 22ஆம் தேதி எண்ணப்பட்டன. அதில் திமுக கூட்டணி அதிகமான இடங்களை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இன்று காலை பதவியேற்க உள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -