Breaking LIVE: விமானப்படை விமானத்தில் இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர்

Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.

ABP NADU Last Updated: 02 Mar 2022 05:58 PM
விமானப்படை விமானத்தில் இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர்

இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-17 விமானத்தில் ருமேனியாவில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர். விமானப்படை சார்பில் இயக்கப்படும் முதல் விமானத்தில் 200 இந்தியர்கள் இன்றிரவு நாடு திரும்புகின்றனர். போலந்து மற்றும் ஹங்கேரியில் இருந்து இந்தியர்களுடன் மேலும் 2 விமானங்கள் நாளை காலை இந்தியா வருகிறது.

ரஷ்யா மீது பொருளாதார தடை

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவதால், 207 ஆண்டுகால நடுநிலைக் கொள்கையை மீறி ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க இருக்கிறது சுவிட்சர்லாந்து

’கீவிலிருந்து இந்தியர்கள் அனைவரும் வெளியேற்றம்’ - மத்திய அரசு தகவல்

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்து இந்தியர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் 12 ஆயிரம் பேர் வெளியேறிவிட்டனர்.

உலக தடகளப் போட்டிகளில், ரஷ்ய வீரர்களுக்குத் தடை.

உலக தடகளப் போட்டிகளில், ரஷ்ய வீரர்களுக்குத் தடை.

ருமேனியா செல்கிறது இந்திய விமானப்படை விமானம்

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் : ருமேனியா செல்கிறது இந்திய விமானப்படை விமானம்

உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்க 26 விமானங்கள்...! மத்திய அரசு அறிவிப்பு..!

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விரைவில் 26 விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

ரஷ்யா - உக்ரைன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை..!

ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்திய மாணவர் உயிரிழப்பு - சற்றுநேரத்தில் பிரதமர் மோடி ஆலோசனை

உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சற்று நேரத்தில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற உள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரில் இந்திய மாணவர் உயிரிழந்த நிலையில் அவசர ஆலோசனை நடக்க இருக்கிறது. 

உக்ரைன் மிக பலமான நாடு. அதனை யாராலும் வீழ்த்தமுடியாது. வெற்றி உறுதி - உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி உரை

ஐக்கிய நாடுகள் சபையில் பொதுச்சபைக் கூட்டத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி உரையாற்றி வருகிறார். “ உக்ரைன் மிக பலமான நாடு. அதை யாராலும் வீழ்ந்த முடியாது” என சபதம் தெரிவித்திருக்கிறார்

உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவரின் குடும்பத்துக்கு, பிரதமர் மோடி ஆறுதல்

உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவரின் குடும்பத்துக்கு, பிரதமர் மோடி ஆறுதல்

ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றது. மாணவர்களை மீட்கும் ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றது - ராகுல் காந்தி

ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றது. உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்கும் ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றது - ராகுல் காந்தி

உக்ரைனில் கொல்லப்பட்ட இந்திய மாணவரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார் கர்நாடக முதலமைச்சர் பொம்மை

ரஷ்ய, உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன்

டெல்லியில் உள்ள ரஷ்ய மற்றும் உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது

ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் படைகள் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல்..

ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் படைகள் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் ருமேனியா சென்றனர் தமிழக மாணவர்கள்

இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் ருமேனியா சென்றனர் தமிழக மாணவர்கள்

உக்ரைனுக்கு எதிரான போரில் பின்வாங்க மாட்டோம் - ரஷ்யா அறிவிப்பு...!

உக்ரைன் நாட்டின் மீது எங்களது தாக்குதல் தொடரும் என்றும், போரில் பின்வாங்கப்போவதில்லை என்றும் ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். 

போரில் இருந்து பின்வாங்கப்போவதில்லை - ரஷ்யா திட்டவட்டம்

மேற்குநாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து ரஷ்யாவைப் பாதுகாப்பதற்கான இலக்கைத் தொடரும் வரை, உக்ரைன் மீது போர் தொடரும் - ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷோய்கு

உக்ரைன் : ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழப்பு

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழப்பு. கார்கிவ் நகரில் இருந்து வெளியேற ரயில்நிலையம் செல்லும்வழியில் குண்டுவெடித்து கர்நாடக மாணவர் நவீன் உயிரிழப்பு

டாடாவின் கோரிக்கையை நிராகரித்த துருக்கி ஏர்லைன்ஸ் முன்னாள் சி.இ.ஓ.

ஏர் இந்தியா நிறுவனம் இந்திய அரசிடம் இருந்து மீண்டும் டாட்டா நிறுவனத்திடம் கைமாறியது. இந்நிலையில் ஏர் இந்தியாவின் புதிய சிஇஓவாக இல்கர் அய்சியை டாடா நிறுவனம் நியமித்திருந்தது. இவர் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இதற்கு முன்பாக பணியாற்றியுள்ளார்.


இந்நிலையில் ஏர் இந்தியாவின் சி.இ.ஓவாக நியமிக்கப்பட்டத்தை இல்கர் அய்சி ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதல்வர் ஸ்டாலினுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து

முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்

சேலத்தில் நீதிபதியை கொல்ல முயற்சி

மாவட்ட ஒருகிணைந்த நீதிபதி பொன்பாண்டியனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது. 

ஜனாதிபதியிடம் விளக்கம் அளித்துள்ளார் பிரதமர் மோடி

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பது குறித்து ஜனாதிபதியிடம் விளக்கம் அளித்துள்ளார் பிரதமர் மோடி

குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு

உக்ரைன் நிலவரம்: குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு

நான் முதல்வன் திட்டம் என் கனவுத்திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

‘நான் முதல்வன்’ என்பதை மாணவர்கள், இளைஞர்கள் உரக்க சொல்லும்போது உங்களுள் நம்பிக்கை பிறக்கும். எனது கனவு திட்டமான திறன் மேம்பாடு திட்டத்தை துவக்கி வைத்தது என் வாழ்வின் பொன்னாளாகும். வேலை இருக்கிறது. ஆனால் அதற்கான தெளிந்த அறிவு இல்லை எனக் கூறப்படுகிறது. அந்த குறையை போக்கவே இத்திட்டம். கல்வி, ஆராய்ச்சி, சிந்தனை, செயலில் திறமையானவர்களாக மாணவர்கள் இளைஞர்களை மாற்றவே திட்டம் துவக்கப்பட்டுள்ளது. 

மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இன்று பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்

முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மீது வழக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய வேலுமணி உள்ளிட்ட 8 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


சட்ட விரோதமாக கூடி நோய் தொற்றை பரப்பும் வகையில் செயல்பட்டதாக 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மலர் தூவி மரியாதை

அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்ற ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார்

அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை

தனது 69வது பிறந்தநாளை அடுத்து அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார் 

இன்றைய பெட்ரோல் டீசல் விலை

இன்று, சென்னையில் பெட்ரோல் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி விற்கப்படுகிறது. தொடர்ந்து 117-வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது.

இந்தியா உதவி செய்யும் - மத்திய அரசு

போரில் தவிக்கும் உக்ரைனிற்கு மனிதாபமான அடிப்படையில் இந்தியா உதவி செய்யும் - மத்திய அரசு

கொரோனா பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை

உக்ரைனிலிருந்து வரும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை என மத்திய அரசு அறிவிப்பு 

உக்ரைனுக்கு சென்ற அமைச்சர்கள்

உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க 4 மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் 

இன்று மகா சிவராத்திரி

நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு 

Background

அண்ணா காலத்தில் தொடங்கிய சுயாட்சி முழக்கம் ஸ்டாலின் காலம் வரை தொடர்கிறது. ஜிஎஸ்டி நிலுவையை கேட்பது முதல்- கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கேட்பது வரை மற்ற மாநிலங்களுக்கும் சேர்த்தே தான் குரல் கொடுக்கிறது தமிழ்நாடு. தன் மாநிலத்திற்கு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களுக்கும் சேர்த்து சிந்திக்கும், போராடும் அண்ணாவின், கலைஞரின் வழித்தடத்தை தொடர்வதால் ஸ்டாலினும் தேசிய அளவிற்கான தலைவராக உயர்ந்திருக்கிறார் என்றே கூறலாம். மாநில சுயாட்சிக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் எழும் முதல் குரல் ஸ்டாலினுடையதாகதான் இருக்கிறது

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.