Breaking LIVE: எஸ்.பி வேலுமணி வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வருகை
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள வேலுமணி வீட்டில் 13 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இலஞ்ச ஒழிப்பு துறை சோதனை நிறைவு. அதிகாரிகள் வெளியே செல்ல விடாமல் அதிமுக தொண்டர்கள் தடுத்து நிறுத்தியதால் காவல்துறை மற்றும் அதிமுக தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது
எஸ்.பி வேலுமணி வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வருகை
ஹிஜாப் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் - கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களுக்கு எதிர்காலம் என்ன? அவர்கள் படிப்புக்கான பொறுப்பை யார் ஏற்பது? - திருச்சி சிவா எம்.பி
உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை மீட்பதற்காக, அங்கு பிரத்யேக ரயில்கள் இயக்கப்பட்டன - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
உக்ரைனிலிருந்து இந்தியகர்கள் மீட்கப்பட்டது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து வருகிறார்.
உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்பு - ஜெய்சங்கர் அறிக்கை
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கு பின் ஜாமீன் கிடைத்த நிலையில், பேரறிவாளன் இன்று புழல் சிறையில் இருந்து வெளியில் வந்தார்
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பக்கோரி சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் தேவையின்றி செல்போன் பயன்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது என்று பணியின்போது செல்போனில் வீடியோ எடுத்த அரசு ஊழியரை சஸ்பெண்ட் செய்ததற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமானது அல்ல - நீதிமன்றம்
கல்வி நிலையங்களில் ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் - கர்நாடகா உயர் நீதிமன்றம் தீர்ப்பு
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2022ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனி ஆண்டுதோறும் ஜூன் 3ஆம் தேதி ரூ.10 லட்சம் பரிசுத்தொகையுடன் கலைஞர் விருது கொடுக்கப்படும் என்றும், அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்க மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இனி ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதி ரூ.10 லட்சம் பரிசுத்தொகையுடன் கலைஞர் விருது வழங்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்
அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் புத்தகப் பூங்கா அமைக்கப்படும் - முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.38,552க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,568 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்த நிலையில் 4,722 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் தொடங்கியது. பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. கோவை மைல்கல் பகுதியில் உள்ள வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.
Background
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. கோவை மைல்கல் பகுதியில் உள்ள வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.
சோதனை நடத்துவதற்கு முன்பாக வீட்டிற்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை உள்ளே விடாமல் தகராறில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வந்த தகவல அறிந்து, வேலுமணியின் வீட்டில் இருந்து இரண்டு பேர் சிசிடிவி கேமராவை தூக்கிச் சென்றதாகவும் அதிகாரிகள் கூறியதால், அவர்களிடம் தொண்டர்கள் ஆக்ரோஷமாக யார் ஓடினார்கள் கேள்வி எழுப்ப, உடனே
எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் வீடு உள்ளிட்ட கோவை மாவட்டத்தில் 41 இடங்களிலும், கோவை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் வேலுமணி தொடர்புடைய நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், ரூ.58.23 கோடிக்கு கூடுதலாகவும், வருமானத்தை விட 3,928% கூடுதலாகவும் சொத்து சேர்த்ததாக எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை நடந்த சோதனையில் ரூ.13 லட்சம் ரொக்கம், ரூ.2 கோடி வைப்புத்தொகை, டெண்டர் ஆவணங்கள் கண்டறியப்பட்டன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -