Breaking LIVE: நாளை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்..
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
நாளை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்..
சர்வதேச கபடி வீரர் சந்தீப் நங்கல், அடையாளம் தெரியாத நபர்களால் பஞ்சாபில் சுட்டுக்கொல்லப்பட்டார்..
சென்னையில் 33 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று
ஈராக்கின் வடபகுதியில் அமெரிக்க துணை தூதரகத்திற்கு அருகே நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கு ஈரான் அரசு பொறுப்பேற்றுள்ளது.
தென்காசி சுரண்டை அருகே 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கா.மாமனந்தல் சாலையிலுள்ள ஏ.கே.டி நகர் பகுதியில் பட்டாசு தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட விபத்தில் ஏழுமலை என்பவர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை.
திருப்பத்தூர் ஆம்பூர் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி, இருவர் காயம்.
நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்களும் விவாதத்துக்கு வரவுள்ளன
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்துக்கு மத்திய அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது எனவும் எதிர்க்கட்சிகள் கேள்வி
பிஎப் வட்டி விகிதம் குறைப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு விரைவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைய வேண்டும் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவில் ஒருநாளில் 2,503 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா வழிமுறைகளை பின்பற்றி புதுச்சேரி முழுவதும் உள்ள மழலையர் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது.
விருத்தாச்சலம் பணிமனை அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் தரமற்ற உணவகத்தில் அரசு பேருந்தை நிறுத்தியதாக பயணிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநரை சஸ்பெண்ட் செய்து கடலூர் மண்டல பொது மேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை அடுத்த ஆவடி இரட்டைக்கொலை விவகாரத்தில் 10 பேரைக் கைது செய்துள்ளது போலீஸ்
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ம் தேதி வெளியாகும் என படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று துவக்கம் : முக்கிய பிரச்சனைகளை குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் முடிவு
சென்னையில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் எவ்வித மாற்றமுமின்றி விற்கப்படுகிறது. தொடர்ந்து 130-வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது.
ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்தும் விதமாக காணொளி மூலம் உக்ரைன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்
இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அதிகாலை 4:06 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Background
உக்ரைனில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அதிகரித்துள்ளதால் தற்காலிகமாக இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -