Breaking LIVE: உள்ளூர் தமிழனோ, உக்ரைன் தமிழனோ, திமுக துணை நிற்கும் - முதலமைச்சர் ஸ்டாலின்

Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.

ABP NADU Last Updated: 13 Mar 2022 08:43 PM
காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தொடர்வார்

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தொடர்வார் என காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பின் தெரிவிக்கப்பட்டுள்ளது

உள்ளூர் தமிழனோ, உக்ரைன் தமிழனோ, திமுக துணை நிற்கும் - முதலமைச்சர் ஸ்டாலின்

உள்ளூர் தமிழனோ, உக்ரைன் தமிழனோ, திமுக துணை நிற்கும் - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாட்டில் 100-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..

தமிழ்நாட்டில் 100-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..

பள்ளி மாணவர்களுக்கு, பாலியல் வன்தொல்லை அளித்த விடுதி துணை காப்பாளர் போக்சோவில் கைது

சேத்துப்பட்டு அருகே அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு தற்பாலினச் சேர்க்கைக்கு வற்புறுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விடுதி துணை காப்பாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்

காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட செயற்குழு கூட்டம் தொடங்கியது

காங்கிரஸ் தற்போது ஆட்சியில் இருக்கும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில முதல்வர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்

காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட செயற்குழு கூட்டம் தொடங்கியது..

காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட செயற்குழு கூட்டம் தொடங்கியது..

ஏப்ரல் 2ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்

டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலயத்தை ஏப்ரல் 2ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயம் கட்டிமுடிக்கப்பட்டு திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக்கடன் மேளா நடத்த உத்தரவு

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதரத்தை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் வங்கிக்கடன் மேளா நடத்த உத்தரவு 

தென் கொரியா : மூன்று லட்சம் பேருக்கு கொரோனா

நேற்று ஒரே நாளில் தென் கொரியாவில் மூன்று லட்சம் பேருக்கு வைரஸ் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேளாண் பட்ஜெட் : கருத்துக் கேட்பு கூட்டம் தொடக்கம்

வேளாண் பட்ஜெட் குறித்த விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டம் தஞ்சையில் அமைச்சர்கள் தலைமையில் தொடக்கம் 

தமிழர் என்றால் ஒரு தனி உணர்வு வரும் : முதலமைச்சர் முக ஸ்டாலின்

தமிழர் என்றால் ஒரு தனி உணர்வு வரும் ; அது உள்ளூர் தமிழராய் இருந்தாலும் சரி, உக்ரைனில் இருந்தாலும் சரி என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் : திருமாவளவன்

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பளிக்காத வகையில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,116 ஆக பதிவு

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு  3,116 ஆக பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

ஈராக்கில் ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல்

ஈராக் நாட்டின் அர்பில் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி 12 ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

சீனாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3, 400 ஆக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

கொடைக்கானலில் பயங்கர காட்டுத் தீ - தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர்

கொடைக்கானல் மேல்மலை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. 300 ஏக்கரில் பரவிய தீயை ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

யோகி ஆதித்யநாத் இன்று டெல்லி செல்கிறார்

உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க உள்ளநிலையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று டெல்லி செல்கிறார்.

சமயபுரம் கோயிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் திருவிழா தொடங்கியது.

விடுபட்ட பதவிகளுக்கு மார்ச் 26 ம் தேதி தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுபட்ட 62 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 26 ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மார்ச் 15 ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வாரக்கடைசியில் மாற்றம் உண்டா? இன்றைய பெட்ரோல், டீசல் விலை..!

சென்னையில் தொடர்ந்து 129-வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது.

சென்னையில் லேசான பனிமூட்டம் காணப்படும்

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். 

5 மாநில தேர்தல் தோல்வி எதிரொலி : இன்று கூடுகிறது காங்கிரஸ் கமிட்டி

5 மாநில தேர்தல் தோல்வி மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடுகிறது. 

Background

சென்னை திருவொற்றியூர், விம்கோ நகர் நிலையங்களில் இன்று முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்குமென மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.