Breaking LIVE: தேர்தல் நடைபெறாமல் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு 26 மார்ச் அன்று மறைமுகத் தேர்தல் கூட்டம்

Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.

ABP NADU Last Updated: 12 Mar 2022 09:31 PM
தேர்தல் நடைபெறாமல் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு 26 மார்ச் அன்று மறைமுகத் தேர்தல் கூட்டம்

பல்வேறு காரணங்களால் தேர்தல் நடைபெறாமல் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு 26 மார்ச் அன்று மறைமுகத் தேர்தல் கூட்டம்

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 155 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அசத்தல் வெற்றி

மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில், இன்று வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்டது இந்திய அணி. 317 இலக்கு நிர்ணயித்திருந்தது இந்திய அணி. சேஸ் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணியை 162 ரன்களுக்கு ஆல்-அவுட்டாக்கி அதிரடி வெற்றி பெற்றிருக்கிறது. 

PF Update: பி.எப். வட்டியில் அதிரடி மாற்றம் செய்த மத்திய அரசு! ஷாக்கில் தொழிலாளர்கள்!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எப் மீதான வட்டி சதவீதம் 8. 50 லிருந்து  8. 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டபோதிலும் கடந்த சில ஆண்டுகளாக பி.எப் மீதான வட்டி குறைக்கப்படவில்லை. இந்தநிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நிர்வாக குழு கூட்டத்தில் வட்டியை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

சாதி, ,மத மோதல்களை ஏற்படுத்த நினைப்போர் மீது நடவடிக்கை : முதலமைச்சர் முக ஸ்டாலின்

சமூக வலைத்தளங்கள் மூலம் சாதி, ,மத மோதல்களை ஏற்படுத்த நினைப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பஞ்சாபில் ஆட்சியமைக்க கோரியது ஆம் ஆத்மி கட்சி

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது ஆம் அத்மி கட்சி. இந்நிலையில், பஞ்சாபில் ஆட்சியமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து உரிமை கோரினார் ஆம் ஆத்மியின் பகவந்த் மான்

மார்ச் 20-ம் தேதி நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை

2019-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மார்ச் 20-ம் தேதி நடைபெற உள்ளது. தனியார் வங்கியில் வைக்கப்பட்டுள்ள வாக்கு பெட்டகங்கள் வாக்கு எண்ணிக்கை நாளன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் நன்றி

உக்ரைன் நாட்டில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்களை மீட்டு மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். 

Gold, Silver Price: இரண்டாவது நாளாக குறைந்த தங்கம், வெள்ளி விலை... வீக்கெண்ட் நிலவரம் இதுதான்

சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு 4,899க்கும், சவரன் ரூ. 39,192க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் தங்கம் கிராமிற்கு 5 ரூபாய் அதிகரித்து 4,894 ரூபாய்க்கும் , சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 39,152 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

IND vs WI: அடுத்தடுத்து சதமடித்து சீறிய சிங்கப்பெண்கள்! நடுங்கிய வெ.இண்டீஸ்! அசத்திய ஸ்மிரிதி, ஹர்மன்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில், இந்திய பேட்டர்கள் சொதப்பிய நிலையில் ஓப்பனர் ஸ்மிரிதி சுதாரித்து கொண்டு ஆடினார். அடுத்து களமிறங்கிய ஹர்மனும் ஜோடி சேர்ந்து அதிரடி காட்ட, இருவரும் சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த போட்டியில் 123 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்மிரிதி அவுட்டாகி வெளியேறினார். ஹர்மன் ப்ரீத் கவுர் தொடர்ந்து விளையாடி வருகிறார். 

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழக மாணவர்களின் கடைசிக்குழு - வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்..!

உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழ்நாட்டு மாணவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின். நாடு திரும்பிய தமிழக மாணவர்களின் கடைசிக்குழுவை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற போது, அமைச்சர் செஞ்சி மஸ்தான், மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசனும் உடனிருந்தனர். உக்ரைனில் சிக்கி தவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 1,860 மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டுள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழக மாணவர்களின் கடைசிக்குழு - வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்..!

உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழ்நாட்டு மாணவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின். நாடு திரும்பிய தமிழக மாணவர்களின் கடைசிக்குழுவை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற போது, அமைச்சர் செஞ்சி மஸ்தான், மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசனும் உடனிருந்தனர். உக்ரைனில் சிக்கி தவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 1,860 மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டுள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

டெல்லி குடிசை பகுதியில் தீ விபத்து - 7 பேர் பலி

டெல்லி கோகுல்புரியில் குடிசை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி பலி 

இந்தியா : ஒருநாள் கொரோனா பலி எண்ணிக்கை 89 ஆக பதிவு 

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனா தொற்றால் 89 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3, 614 ஆக பதிவு

இந்தியாவில் ஒருநாளில் 3, 614 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை : ஒருவர் கைது

ஜம்மு- காஷ்மீரில் 3 இடங்களில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான மோதல் மூன்றாம் உலகப்போர்தான் இருக்கும் : அமெரிக்க அதிபர்

நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான மோதல் மூன்றாம் உலகப்போர்தான் இருக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். 

முட்டை கொள்முதல் விலை ரூ. 3.70 ஆக உயர்வு

நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ரூ. 3.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

சவூதி அரேபியாவில் டிரோன் தாக்குதல்...

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றின் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

Womens world cup 2022 : வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான உலககோப்பை போட்டி : டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி மூன்றாவது போட்டியில் விளையாடி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியை அடுத்து வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்திய அணி விளையாடி வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்தியா - இலங்கை மோதும் 2வது டெஸ்ட் போட்டி : இன்று தொடக்கம்

இந்தியாவும் இலங்கையும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு பெங்களூரில் அமைந்துள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. 

IPL 2022 : கொல்கத்தா அணியில் ஆரோன் பிஞ்ச்..

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் விலகியதால் அவருக்கு பதிலாக ஆரோன் பிஞ்ச் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதிமுகவை அழிக்கவே தமிழ்நாடு அரசு பொய் வழக்கு போடுகிறது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவை அழிப்பதற்காக தமிழ்நாடு அரசு பொய் வழக்கு போடுகிறது. நகர்ப்புற தேர்தலில் கள்ள ஓட்டை தடுக்க முயன்ற என் மீதும் பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர் என்று ஜாமீனில் இருந்து வெளிவந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

Background

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் எவ்வித மாற்றமுமின்றி விற்கப்படுகிறது. தொடர்ந்து 128-வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.