Breaking LIVE:ஏப்ரல் 30, 2020-க்கு பிறகு கொரோனா மரண எண்ணிக்கை பூஜ்ஜியமாக பதிவானது இன்று

Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.

ABP NADU Last Updated: 11 Mar 2022 08:33 PM
ஏப்ரல் 30, 2020-க்கு பிறகு கொரோனா மரணம் எண்ணிக்கை பூஜ்ஜியமாக பதிவானது இன்று

ஏப்ரல் 30, 2020-க்கு பிறகு கொரோனா மரண எண்ணிக்கை பூஜ்ஜியமாக பதிவானது இன்று



 


 


 

சென்னையில் நடைபெறும் மாவட்ட ஆட்சியர்களின் மாநாட்டில் முதலமைச்சர் நிறைவு உரை

 சென்னையில் நடைபெறும் மாவட்ட ஆட்சியர்களின் மாநாட்டில் முதலமைச்சர் நிறைவு உரை


 


விளிம்புநிலை மக்களின் தேவைகளை நிறைவேற்ற முன்னுரிமை அளியுங்கள் - ஆட்சியர்களின் மாநாட்டில் முதலமைச்சர் நிறைவு உரை


 

காங்கிரஸ் கட்சி விரும்பினால் 2024-இல் இணைந்து போட்டி - மம்தா பானர்ஜி

காங்கிரஸ் கட்சி விரும்பினால் 2024-இல் மக்களவைத் தேர்தலில் இணைந்து போட்டியிடலாம் - மம்தா பானர்ஜி

330 மனநோயாளிகள் சிகிச்சை எடுத்துவந்த உக்ரைன் மருத்துவமனையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா.

330 மனநோயாளிகள் சிகிச்சை எடுத்துவந்த உக்ரைன் மருத்துவமனையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா.

ஏறுமுகத்தில் எண்ணெய் விலை: சூரியகாந்தி எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வதில் பாதிப்பு

ஏறுமுகத்தில் எண்ணெய் விலை: சூரியகாந்தி எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வதில் பாதிப்பு. 80% சூரியகாந்தி எண்ணெய் உக்ரைனில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. போர் சூழலால் இப்போது இந்தியாவுக்கான எண்ணெய் இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

ரஷ்யா- உக்ரைன் போர் எதிரொலியாக, விளாடிமிர் என்று இருந்த உணவின் பெயரை வோலோடிமிர் என மாற்றியது கனடிய உணவகம் ஒன்று

ரஷ்யா- உக்ரைன் போர் எதிரொலியாக, விளாடிமிர் என்று இருந்த உணவின் பெயரை வோலோடிமிர் என மாற்றியது கனடிய உணவகம் ஒன்று

காஷ்மீர் அருகே ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் விபத்து

ஜம்மு - காஷ்மீர் அருகே குரேஸ் பகுதியில் இந்திய ராணுவத்தின்  சீட்டா வகை ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. தொடர்ந்து, தேடுதல் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுப்பட்டுள்ளனர். 

இந்தியா - சீனா இடையே பேச்சுவார்த்தை

எல்லையில் படைகளை வாபஸ் பெறுவது குறித்து இந்தியா - சீனா இடையே லடாக்கில் பேச்சுவார்த்தை

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

தமிழ்நாட்டில் வரும் 13ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை - சென்னை வானிலை மையம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்

5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரித்த வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்ஜாமீன் கோரி சசிகலா, இளவரசி மனுத்தாக்கல்

சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர லஞ்சம் தந்த புகாரில் முன்ஜாமீன் கேட்டு சசிகலா, இளவரசி மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

ராஜேந்திர பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை நிராகரித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தனக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டநிலையில், கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம். 

தென்மண்டல துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது

தென்மண்டல துணைவேந்தர்கள் மாநாட்டை கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ரவி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 6 மாநிலங்களை சேர்ந்த 75 துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

Gold, Silver Price: ஏறி இறங்கும் தங்கம் விலை... இன்றைய காலை நிலவரம் இதுதான்

சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு 4,885க்கும், சவரன் ரூ. 39,080க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் தங்கம் கிராமிற்கு 21 ரூபாய் அதிகரித்து 4,906 ரூபாய்க்கும் , சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து 39,248 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. நேற்று அதிரடியாக விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது. 

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் 3 நாள் மாநாட்டை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி உள்ளார். இன்று நடைபெற இருக்கும் இரண்டாம் நாள் ஆலோசனை கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. 

நாளை ஆளுநரை சந்திக்கிறார் பகவந்த் மான்

பஞ்சாபில் ஆட்சியமைக்க நாளை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து உரிமை கோருகிறார் ஆம் ஆத்மி பகவந்த் மான்.

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 255பேர் பலி

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனா தொற்றால் 255 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4, 194 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4, 194 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

உக்ரைனுக்கு மேலும் ரூ. 380 கோடி நிதியுதவி - அமெரிக்கா

ஐ, நா. வின் உலக உணவு திட்டத்தின் கீழ் உக்ரைனுக்கு மேலும் ரூ. 380 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். 

இந்தியா - சீனா இடையே பேச்சுவார்த்தை

இந்திய - சீன எல்லையில் படைகளை வாபஸ் பெறுவது குறித்து ராணுவ அதிகரிகளுக்கு இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

ரஷ்யாவில் தனது சேவையை நிறுத்துவதாக சோனி மியூசிக் அறிவிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடித்தி வரும் நிலையில், சேவை நிறுவனங்கள் சில எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமேசனை அடுத்து சோனி மியூசிக் நிறுவனமும் தனது ரஷ்யாவில் தனது சேவையை நிறுத்தி கொள்வதாக அறிவித்திருக்கிறது.

தேர்தல் முடிவு வந்தாச்சு... பெட்ரோல், டீசல் விலை ஏறியதா? இறங்கியதா? இன்றைய நிலவரம்!

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் எவ்வித மாற்றமுமின்றி விற்கப்படுகிறது. தொடர்ந்து 127-வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது.

இன்றும் நாளையும் கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா!

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு ராமேஸ்வரத்தில் இருந்து இன்று காலை சுமார் 10 மணியளவில்  4 படகுகளில் 80 பேர் மட்டும் செல்கின்றனர்.

சசிகலா மீதான லஞ்ச புகார்

பரப்பன அக்ரஹர சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்ததாக புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆஜராகிறார் சசிகலா

தொடரும் ரஷ்ய- உக்ரைன் பேச்சுவார்தை

ரஷ்ய- உக்ரைன் பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது

இந்தியா - இலங்கை மோதும் 2வது டெஸ்ட் போட்டியில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி

முன்னதாக, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு 50% பார்வையாளர்களுக்கு அனுமதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு பிசிசிஐ ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில், பெங்களூருவில் நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறது. 

Background

தற்போதைய 5 மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் உள்ள 31 மாநிலங்களுள் 18 மாநிலங்களில் ஆளுங்கட்சியாகப் பொறுப்பு வகிக்கிறது. அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தராகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக மற்றும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது.  


பாஜக அருணாச்சலப் பிரதேசம், கோவா, குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தராகாண்ட் ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வருகிறது. அதே போல, அசாம், பீகார், ஹரியானா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பாஜக இடம்பெற்றுள்ள கூட்டணியான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஆட்சி நடைபெற்று வருகிறது. 


இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சுமார் 50 சதவிகிதத்திற்கும் மேலான பகுதிகளில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் கைவசம் சத்திஸ்கர் மாநிலம் மட்டுமே தனித்து ஆட்சியில் இருக்கிறது. பிற மாநிலங்களான ஜார்க்கண்ட், மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றிருக்கிறது காங்கிரஸ் கட்சி. ஆம் ஆத்மி கட்சி டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை அமைத்துள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.