Breaking LIVE: வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு - தமிழக அரசு
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தலா ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உள்ளூர் தொழில்நுட்பம், புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு, ஏற்றுமதியில் சிறந்துவிளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது.
5 மாநில தேர்தல் தொடர்பாக ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்.
மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். ஆணை வென்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அனைத்து காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக எனது நன்றி. இதிலிருந்து பாடம் கற்று, இந்திய மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாமக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின் காரணமாக பெரும்பாலான திரையரங்குகளில் காலை நான்கு மணி அளவில் திரையிடப்படும் முதல் ரசிகர் ஷோ இன்றி ஏழு மணிக்கு பிறகு திரைப்படம் முதல் காட்சி திரையிடப்பட்டது
இந்தியாவில் மிகவும் பழமையான கட்சியாக பார்க்கப்படும் காங்கிரஸ் கட்சி, இன்று நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகளை பொறுத்து மீண்டும் ஒரு அடி சறுக்கியுள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி இன்று தனது ஆட்சியை இழந்தது மூலம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 3 லிருந்து 2 ஆக குறைந்துள்ளது.
தமிழ்நாடு அரசு அவ்வப்போது ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணி மாற்றம் செய்து அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு புதிய ஐபிஎஸ் பதவி உயர்வு உத்தரவை அறிவித்துள்ளது. அதன்படி ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு அவ்வப்போது ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணி மாற்றம் செய்து அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு புதிய ஐபிஎஸ் பதவி உயர்வு உத்தரவை அறிவித்துள்ளது. அதன்படி ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வை அறிவித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,236 புள்ளிகள் உயர்ந்து 55,885 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 368 புள்ளிகள் உயர்ந்து 16,713 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது.
சென்னையில் 22 ஆபரணத் தங்கம், கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து 4,910 ரூபாய்க்கும், சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து 39,280-க்கு விற்பனையாகிறது.
இயக்குனர் பாண்டிராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் இத்திரைப்படத்தின் முதல் காட்சி முடிவடைந்துள்ளது. படம் பார்த்தவர்கள் பாசிட்டீவ் விமர்சனத்தை வெளியிட்டு வருகின்றனர்.
ஒரே நாடு ஒரே தேர்தலை நாங்கள் நடத்த தயார் என்று இந்திய தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, இவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நல்ல பரிந்துரை, ஆனால் இதற்கு அரசியலமைப்பில் மாற்றம் தேவை, அது நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் முழுமையாக தயாராக உள்ளது மற்றும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் திறன் கொண்டது என தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
அரியலூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் லட்சுமி பிரியா விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தற்போது திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள் மாநாடு : இன்று முதல் 3 நாட்கள் தலைமை செயலகத்தில் நடக்கிறது.
Background
5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள் மாநாடு, இன்று முதல் 3 நாட்கள் தலைமை செயலகத்தில் நடக்கிறது.
இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -