தமிழ்நாடு



  • புதிய கல்விக் கொள்கை புரட்சிகரமானது; சென்னையில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பேச்சு. 

  • திமுக எம்.பிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை; நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்பவேண்டிய முக்கிய கேள்விகள் குறித்து அறிவுரை.

  • ’எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என தி.மு.க. அரசு செயல்படுகிறது’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!

  • பிப்ரவரி 1ஆம் தேதி தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • அதிமுக விவகார வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 

  • இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கண்மணி என்கிற மேனகா நவநீதன் போட்டியிடுவார் என  கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு.

  • எடப்பாடி பழனிச்சாமி ஜி.கே வாசன் சந்திப்பு - திமுகவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்கத் தயாராகிவிட்டதாக ஜி.கே வாசன் பேட்டி. 

  • சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அதிகரிக்கும் ஃப்ளூகாய்ச்சல்; கவனமுடன் இருக்குமாறு மருத்துவர்கள் எச்சரிக்கை. 

  • மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நாட்களுக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை. 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்படும் எனவும் வேதனை. 


இந்தியா



  • ஒடிசாவில் உதவி ப்காவல் ஆய்வாளரால் துப்பாக்கியால் சுடப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் நபாதாஸ் உயிரிழப்பு. துணை காவல் உதவி ஆய்வாளர் கைது. 

  • மத்திய அர்சின் திட்டங்களை நடுத்தர மக்களிடம் எடுத்துச்சொல்லுங்கள். மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தல். 

  • ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் இன்றுடன் நிறைவு. ஸ்ரீநகரில் நடக்கும் இறுதி நிகழ்வில் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். 

  • புதுச்சேரியில் இன்று துவங்குகிறது ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளின் கூட்டம். பல்வேறு நாடுகளைக் சேர்ந்த 75 பிரதிநிதிகள் பங்கேற்பு. 

  • கொட்டும் மழையிலும் நடந்தது முப்படை வீரர்களின் பாசறை திரும்பும் நிகழ்ச்சி. குடியரசுத் தலைவர், பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர் என பலர் பங்கேற்பு.


உலகம் 



  • கியர்பாக்ஸில் உள்ள தொழில்நுட்பக் கோளாரால் 18 ஆயிரத்து 489 பைக்களுகளை திரும்பப் பெறுகிறது பி.எம்.டபள்யூ நிறுவனம். 

  • ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத பெண்களுக்கு விதிப்பு. 


விளையாட்டு 



  • 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில், இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன். 

  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் 10வது முறையாக பதக்கத்தை வென்ற ஜோகோவிச். 

  • நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி; 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரையும் தக்கவைத்தது.