ஒடிசாவின் பால்சோர் (Balasore) மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இது பெற்றோர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிள்ளது.


Barkhuri ME பள்ளியில் பல மாணவர்கள் தங்களுக்கு தலைவலி மற்றும் வயிற்று வலி இருப்பதாக கூறியதால் அவர்களை மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணையில், ஆறாம் மற்றும் ஏழாம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் அந்தப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். அதனாலேயே அவர்களின் உடல்நிலை ஏதோ பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அருகில் உள்ள சோரோ மருத்துவமனையில் ( Soro Hospital )சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். 


பள்ளி மாணவர்களுக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல்போனதால் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. 


இந்த சம்பவம் தொடர்பாக முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இதற்கு காரணமானவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். 


இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


 சோரோ மருத்துவமனை நிறுவனர் வெளியிட்டுள்ள செய்தியில் மாணவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதில் சிலர் ஏதும் சாப்பிடாமல் விளையாடியதாலும், மன நலன் சீராக இல்லையென்பதாலும் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




இதையும் படிங்க..


Athivaradhar Temple: புகழ்பெற்ற அத்திவரத வரதராஜ பெருமாள் கோயிலில் யூடியூப் சேனல்களுக்கு தடை..! இதுதான் காரணம்..!


EPS Speech:"அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு குழந்தைகள் கிடையாது; நாம்தான் வாரிசு”: எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு